ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் வெற்றி! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

11-வது ஐபிஎல் தொடரில் 38-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்தப் போட்டி இந்தூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லரும் டிஜேஎம் ஷார்ட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் வீசிய பந்தில் டையிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களுடன் ஷார்ட் பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் வெற்றி! 2அடுத்து வந்த கேப்டன் ரஹானேவும் 5 ரன்களுடன் வெளியேற அணி கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டது. ஒருமுனையில் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார். 39 பந்துகளை சந்தித்த பட்லர் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து முஜீப் சுழற்வீச்சில் அவுட் ஆனார். சாம்சன் 28 ரன்களுடன் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முஜீப் உர் ரஹ்மான் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் வெற்றி! 3

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் 8 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தார். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியே பஞ்சாப் அணி தடுமாற்றத்தை சந்தித்தது. கருன் நாயரும் ராகுலும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் கருன் நாயர் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு களமிறங்கிய அக்சர் படேலும் அவுட் ஆக ஸ்டோனிஸ் இறங்கி கே.எல்.ராகுலுடன் கைகோர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் வெற்றி! 4இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். கே.எல்.ராகுல் அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுதினார். 54 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 3 சிக்ஸர்கள்  பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 18.4 ஓவர்களிலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை  9 போட்டிகளில் விளையாடியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அனி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *