இந்தியாவில் இப்படி ஒரு பந்துவீச்சாளரா? மிரண்டு போய் பாராட்டிய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் க்ளூஸ்னர்! ஆனால் அது பும்ரா இல்லை 1

இந்திய அணியில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுபவர்களை அதிக பார்க்க முடிவதில்லை என்று தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூசெனர் கூறியுள்ளார்.

அவருடைய  சிறப்பான பந்து வீச்சு இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினரை வெகுவாக கவர்ந்தது. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் சிறப்பாக பந்து வீசினார். 150  கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் நவ்தீப் சைனி தென்ஆப்பிரிக்கா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் இப்படி ஒரு பந்துவீச்சாளரா? மிரண்டு போய் பாராட்டிய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் க்ளூஸ்னர்! ஆனால் அது பும்ரா இல்லை 2
India XI player Navdeep Saini, right, celebrates the wicket of Australia’s Matt Renshaw’s during a practice match in Mumbai, India, Friday, Feb 17, 2017. (AP Photo/Rajanish Kakade)

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் அந்த அணி விளையாடவுள்ளது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுபவர்களை அதிக பார்க்க முடிவதில்லை என்று தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூசெனர் கூறியுள்ளார். இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், “வேகப்பந்துவீச்சில் சைனி அதிக தாகம் கொண்டவர். அவரது பந்துவீச்சு மிகவும் துல்லியமாக உள்ளது. அவர் உடல்தகுதியும் சிறப்பாக உள்ளது”

இந்தியாவில் இப்படி ஒரு பந்துவீச்சாளரா? மிரண்டு போய் பாராட்டிய தென்னாப்பிரிக்க ஜாம்பவான் க்ளூஸ்னர்! ஆனால் அது பும்ரா இல்லை 3
“While he loves bowling at 150 clicks, he knows that ability doesn’t last forever but while you can bowl 150 kmph now, then just enjoy,” he added.

அவருடைய சிறப்பான ஆக்சன் மிகவும் தெளிவாகவும், ஒரே அளவாகவும் உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளார். ஆனால் அவருடன் நான் உரையாடியபோது, அவர் 150 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீச துடிக்கிறார் என்பதை உணர்ந்தேன்’’ என்றார்.என்று கூறினார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *