இந்த வருட ரஞ்சி கோப்பைத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 4 பிரிவுகளாக அணிகள் பிரிகப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள் அமர்த்தப்பட்டுள்ளன. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும்.
தற்போது கிட்டத்தட்ட 6 போட்டிகளில் அனைத்து அணிகளும் 3 போட்டிகள் விளையாடிவிட்டது. இன்னும் சில தினங்களில் லீக் சுற்றின் 4ஆவது போட்டி துவங்கவுள்ளது. தற்போது தமிழ்நாடு அணியின் 4ஆவது மற்றும் 5ஆவது போட்டிகள் சென்னையில் இருந்து மத்திய பிரதேசம் மற்றும் பரோடா ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
முன்னதாக நவ்.17 மற்றும் நவ்.25ஆம் தேதிகள் சென்னையில் துவங்குவதாக இருந்த இந்த போட்டிகள் தற்போது மத்திய பிரதேசம் மற்றும் பரோடா ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதாலும், போட்டி நடைபெறும் நாட்களில் வடகிழக்கி பருவமழை காலம் வருவதால் போட்டிகளை சென்னையில் இருந்து மாற்ற தமிழக கிரிக்கெட் வாரியம் சார்பில் பி.சி.சி.ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற தற்போது அந்த குறிப்பிட்ட போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி கொடுத்துள்ளது பி.சி.சி.ஐ. மேலும், மத்திய பிரதேசத்தில் நடைபெறும் போட்டி இந்தூருக்கு மாற்றப்படலாம் எனவும் பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாளை (நவ்.9) ஒடிஷா அணியுடன் நடைபெறும் போட்டிக்காக கட்டாக்கில் உள்ளது தமிழக அணி. மேலும், அடுத்த 5 மற்றும் 6ஆவது போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாள் அதற்கேற்றார் போல் வீரர்கள் தங்களை தயார் செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் இரண்டாவது போட்டி சென்னையில் திரிபுராவிற்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டியில் தமிழக அணி வெற்றி பெறும் தருணத்தில் இருந்து பின்னர் மழையால் புள்ளிகளை இழக்க வேண்டியதாயிற்று. இதன் காரமனமக தற்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்.
தற்போது, தமிழக அணி உள்ள ‘சி’ பிரிவில் தமிழக அணி 3 போட்டிகளில் விலையாடி மூன்றையும் ட்ரா செய்து 7 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் ஆந்திரா, மத்திய பிரதேஷ், மும்பை ஆகிய அணிகள் முறையெ உள்ளன.