அடுத்த தேர்வுக்குழு தலைவராகப்போகும் முன்னாள் வீரர்: ரசிகர்கள் ஜாலி 1

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சீனியர் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான குழுதான் இந்திய வீரர்களை தேர்வு செய்கிறது.

தேவங்காந்தி, ககன் கோடா, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகிய 4 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால் புதிய தேர்வுக் குழுவை கிரிக்கெட் வாரியம் அறிவிக்க உள்ளது.

அடுத்த தேர்வுக்குழு தலைவராகப்போகும் முன்னாள் வீரர்: ரசிகர்கள் ஜாலி 2
MUMBAI, INDIA – NOVEMBER 2: MSK Prasad, Indian team selection committee Chairman, during a press conference to declare India’s test team against England at BCCI headquarters, on November 2, 2016 in Mumbai, India. The Supreme Court appointed Lodha Committee

முன்னாள் சுழற்பந்து வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான எல். சிவராமகிருஷ்ணன் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தின்போது புதிய தேர்வுக்குழு தலைவர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்வுக்குழு உறுப்பினர்களில் தேவங்காந்தி, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகியோருக்கு அடுத்த ஆண்டு இறுதி வரை பதவி காலம் இருக்கிறது. இதனால் இந்த 3 பேரும் தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினராக நீடிக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ககன் கோடா இடத்தில் வேறு ஒரு தேர்வுக்குழு உறுப்பினர் நியமிக்கப்படலாம் . ஜூனியர் தேர்வாளரான ஞானேந்திர பாண்டே, ஆசிஷ் நெக்ரா, தீப்தாஸ் குப்தா ஆகியோரில் ஒருவர் இதற்கான வாய்ப்பில் உள்ளனர். தற்போதைய தேர்வுக்குழு கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும்.அடுத்த தேர்வுக்குழு தலைவராகப்போகும் முன்னாள் வீரர்: ரசிகர்கள் ஜாலி 3

இதேபோல தேர்வுக்குழு உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

தேர்வுக்குழு தலைவருக்கு தற்போது ரூ.1½ கோடி ஊதியம் வழக்கப்படுகிறது. இனி அது ரூ.2 கோடியாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. இதேபோல தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.90 லட்சம் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1.25 கோடியாக உயர்த்தி வழங்கப்படலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *