கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு லியாம் பிளங்கெட் இல்லை!! காயம் காரணமாக விலகினார்!!
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கோமட ஒருநாள் தொடர் நடந்து வருகின்றனது. இந்த தொடரின் முதல் மூண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

மேலும், முத்த இரண்டு போட்டிகளில் 4 சிக்கெட் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த லியாம் பிளங்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மூன்றாவது போட்டியில் பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மீதம் உள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் (வயது 29). இவர் அந்த அணிக்காக இதுவரை 80 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், இந்த மாதம் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறாதது ஆச்சரியம் ஏற்படுத்தியது.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தேர்வு குழு தலைவரான டிரெவர் ஹான்ஸ் ஆகியோர், அணியில் மேக்ஸ்வெல் இடம் பெறுவதற்கு சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் அவருக்கு அதிகம் தேவையாக இருக்கிறது என கூறினர்.
இந்த நிலையில் அணியில் விளையாடி வரும் ஆரன் பின்ச் காயத்தினால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக அணியில் மேக்ஸ்வெல் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பெர்த்தில் ஞாயிற்று கிழமை நடைபெறும் 5வது போட்டியில் பின்ச் விளையாடுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.
இந்த போட்டி தொடரில் 3-0 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது.