எனக்கு தனியாக இருக்கும் போது பாதுகாப்பு இல்லை – துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் தோனி மனைவி சாக்சி!!
வீட்டில் எப்போதும் தனியாக இருக்கும் தோனியின் மனைவி சாக்சி தற்போது லைசன்சுடன் துப்பாக்கி கேட்டு விண்ணப்பித்துள்ளார். பெரும்பாலும் தோனி வீட்டில் இருப்பதில்லை. ஏனெனில் அவர் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆட சென்று விடுவார்.
மற்ற நேரங்களில், இதர விளம்பரம் மற்றும் பயிற்சி வேளைகளில் இருப்பார். இதனால் மனைவி சாக்சி மற்றும் குழந்தை ஸிவா ஆகியோர் வீட்டில் தனியாக இருக்க வேண்டும்.
மேலும், தற்போது தோனி அமைந்துள்ள பண்ணை வீடு 45 ஏக்கர் அளவில் பறந்து விரிந்தது. இந்த வீட்டில் தான் தற்போது தோனி மற்றும் அவரது மனைவி இருவரும் வசித்து வருகின்றனர்.
தோனி வீட்டில் இல்லாத சமயத்தில் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதனால் தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அதனால் தற்காப்பிற்காக தனக்கு லைசன்சுடன் துப்பாக்கி வேண்டும் என விண்ணப்பித்துள்ளார் சாக்சி.
ஜி நியூஸ் செய்திப்படி,
சாக்சி, ஒரு பிஸ்டல் அல்லது 0.32 ரக ரிவால்வர் ஆகியவற்றில் ஒன்று வேண்டும் என விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், வீட்டில் பெரும்பாலான நேரங்களில் தனியாக இருப்பதால் தனது பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. அதனால் தான் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் உள்ளது.
இதேபோல் கடந்த 2008ஆம் ஆண்டு தோனி 9mm பிஸ்டலுக்கு வின்ன்னபித்து லைசன்சுடன் பெர்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இரண்டு வருடம் கழித்து 2010ல் தான் உள்துறை அமைச்சகம் அவருக்கு துப்பாக்கி லைசன்ஸ் கொடுத்தது குறிப்பித்தக்கது.
தோனி ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல், இராணுவ வீரராகம் இருந்து வருகிறார். அவருக்கு கர்ணல் பதவி இராணுவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் நன்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற ஒரு வீரர் ஆவார்.சென்ற வருடன் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர், கொல்கத்தா கமிஷனர் அலுவலகம் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .