ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பல உலகச் சாதனைகளைப் படைத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில்
விளையாடி வருகிறது. நோட்டிங்கம் மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய
இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தது. இது ஒரு நாள் போட்டியில் அடிக்கபட்ட அதிகப் பட்ச ஸ்கோர் ஆகும்.
இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய , இங்கிலாந்து அணி 444 ரன்கள் அடித்ததே , ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட
அதிகப்பட்ச ஸ்கோராக இருந்துவந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது சாதனையை தானே முறியடித்திருக்கிறது.
அது மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியதன் மூலம், அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்ட அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன்பு 1986-ல் நியூஸிலாந்து அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் அஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் நியூஸிலாந்தின் சாதனயை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 62 பவுண்டரிகளை அடித்ததன் மூலம், ஒரே போட்டியில் அதிகபட்ச பவுண்டரிகள்
அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதன் மூலம் 59 பவுண்டரிகள் அடித்த இலங்கை அணியின் சாதனையை
அது முறியடித்துள்ளது.
இதனிடையில் 242 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து தன்னுடய மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2015-ல் எட்க்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தை 210 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகில் பல அணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வந்த ஆஸ்திரேலியா அணியில் , ஸ்டீவ் சுமித் மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்டோரின் பங்கு இல்லாமல் சமீப காலமாக போட்டிகளில் திணறி வருகிறது. இவர்கள் இருவருக்கும் பால் டாம்பெரிங் சர்ச்சையில் சிக்கி ஒரு வருட தடை விதிக்கபட்டிருப்பது குறிப்பிடதக்கது.
இங்கிலாந்தின் மிகப்பெரிய வெற்றிகள் (ரன்கள் வித்தியாசத்தில்) :
242 – ஆஸி, ட்ரெண்ட் பிரிட்ஜ், 2018 *
210 – நியூசிலாந்து, எட்க்பாஸ்டன், 2015
202 -இன்ட், லார்ட்ஸ், 1975
198 -பாகிஸ்தான், ட்ரென்ட் பிரிட்ஜ், 1992
196 – கிழக்கு ஆபிரிக்கா, எட்க்பெஸ்டன், 1975
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தோல்வி (ரன்கள் வித்தியாசத்தில்):
242 – இங்கிலாந்து , ட்ரெண்ட் பிரிட்ஜ், 2018 *
206 – நியுஸிலாந்து , அடிலெய்ட், 1986
196 – தென்னாப்பிரிக்கா, கேப் டவுன், 2006
164 – வெஸ்ட் இண்டீஸ், பெர்த், 1987
159 – நியூசிலாந்து, ஆக்லாந்து, 2016
முன்னனி அணிகல் அடைந்த மிகப்பெரிய தோல்விகள் (ரன்கள் வித்தியாசத்தில்) :
272 ஜிம்பாப்வே- தென்னாப்பிக்க அணிகெதிராக., பெனோனி, 2010
258 இலங்கை – தென்னாப்பிக்க அணிகெதிராக, பார்ல், 2012
257 மேற்கிந்தியத் – தென்னாப்பிக்க அணிகெதிராக., சிட்னி, 2015
245 இந்தியா – இலங்கை, ஷார்ஜா, 2000
242 ஆஸி – இங்கிலாந்து, ட்ரெண்ட் பிரிட்ஜ், 2018 *