டிஎன்பிஎல் போட்டிகளில் உன்முக்த் சந்த், ஹனுமா விஹாரி, 16 வெளிமாநில வீரர்கள் 1

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் டிஎன்பிஎல் 3-வது ஆண்டு போட்டிகளில் 16 வெளிமாநில வீரர்கள் கலந்து கொண்டு முதன்முறையாக விளையாடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்ஐ.பழனி கூறியுள்ளதாவது:
தில்லியைச் சேர்ந்த உன்முக்சந்த், ஆந்திர வீரர் ஹனுமா விகாரி, செளராஷ்டிரா விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் உள்பட 16 வெளிமாநில வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விளையாடுவது பிசிசிஐ அனுமதிக்கு பின் நடைபெறும்.டிஎன்பிஎல் போட்டிகளில் உன்முக்த் சந்த், ஹனுமா விஹாரி, 16 வெளிமாநில வீரர்கள் 2

முதன்முறையாக வெளிமாநில வீரர்கள் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடுகின்றனர்.

இதையொட்டி ஏற்கனவே 8 அணிகளுக்கும் வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டனர். இந்த சீசனில் முதல்முறையாக வெளிமாநில வீரர்களும் இடம் பெறுகிறார்கள். ஒரு அணியில் இரண்டு வெளிமாநில வீரர்கள் இடம்பிடித்து விளையாட முடியும்.

அந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கக்கூடாது. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எந்த அணியிலும் இடம் பெற்று இருக்கக்கூடாது. மேலும் தங்கள் சொந்த மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட 13 மாநிலங்களில் இருந்து 112 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.டிஎன்பிஎல் போட்டிகளில் உன்முக்த் சந்த், ஹனுமா விஹாரி, 16 வெளிமாநில வீரர்கள் 3

ஒவ்வொரு அணியும் 2 வெளிமாநில வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உள்ளூர் வீரர்களுக்கும் சிறந்த அனுபவம் கிடைக்கும். தங்கள் மாநில சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வர வேண்டும். 2018 ஐபிஎல் போட்டியில் எந்த அணியிலும் விளையாடதவராக இருக்க வேண்டும் என்றார்.
மூன்றாவது டிஎன்பிஎல் போட்டிகள் வரும் 11 முதல் ஆக. 12 வரை நடக்கிறது.

ஒவ்வொரு TNPL அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களின் முழு பட்டியல்:

  1. ஜோன்ஸ் துடி நாட்டு பேட்ரியாட்ஸ் – ஷெல்டன் ஜாக்சன் மற்றும் சல்மான் நிஜார்
  2. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – கேதர் தேவ்தார் மற்றும் ஷாரியா சானந்தியா.
  3. லைகா கோவை கிங்ஸ் – தர்மேந்திர ஜடேஜா மற்றும் ஷோராப் தாலிவால்
  4. மதுரை பேந்தர்ஸ் – அமித் வர்மா மற்றும் ரீபீ கோமஸ்
  5. ரூபி திருச்சி வாரியர்ஸ் – ஹிமாத் சிங் மற்றும் லூக்மன் மெரிவாலா
  6. காஞ்சி வீரண்ஸ் – ஸ்வப்னிங் சிங் மற்றும் சந்தீப் வார்ரியர்
  7. திண்டுக்கல் டிராகன்கள் – அர்பித் வாசுவாடா மற்றும் ஹனுமா விகார்
  8. iDream காரைக்குடி கால்வாய் – ஆதித் ஷெத் மற்றும் உண்முட் சந்த்

 

பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறுகையில், ‘பிறமாநில வீரர்கள் இடம்பெறுவதன் மூலம் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் தரமும், போட்டிக்குரிய சவாலும் அதிகரிக்கும். நமது மாநில வீரர்களின் திறமை மேலும் பட்டை தீட்டப்படும். ஆடும் லெவன் அணியில் இரண்டு வெளிமாநில வீரர்களையும் சேர்த்துக் கொள்ள அணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *