இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான். தற்போது அவர் இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியுள்ள இளம் வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
இஷான் கிஷான் – 17 வருடம் 268 நாட்கள்
இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்தார் இஷான் கிஷான். ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடும் போது ஐபில் இல் அறிமுகம் ஆனார்.
ராகுல் சஹார் – 17 வருடம் 247 நாட்கள்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான ராகுல் சஹார் 2017ஆம் ஆண்டு நடந்த ஐபில் தொடரில் புனே அணிக்காக விளையாடி, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் – 17 வருடம் 199 நாட்கள்
தமிழகத்தை சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 2017ஆம் ஐபில் தொடரில் புனே அணிக்காக ஐபில் தொடரில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு இந்திய அணிக்காகவும் அறிமுகம் ஆன அவர், பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ளார்.
பிரதீப் சங்வான் – 17 வருடம் 179 நாட்கள்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் சங்வான் 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபில் தொடரிலேயே டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து அசத்தினார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடி வந்தார்.
சர்பராஸ் கான் – 17 வருடம் 177 நாட்கள்
மும்பையை சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான் 2015 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக ஐபில் தொடரில் அறிமுகம் ஆகி சில முக்கியமான போட்டியில் ரன் அடித்து அசத்தியுள்ளார். மேலும், இந்த வருட ஐபில் தொடருக்காக அவரை பெங்களூரு அணி தக்கவைத்து கொண்டது.
முஜீப் உர் ரஹ்மான் – 17 வருடம் 11 நாட்கள்
வங்கதேசத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் கலக்கிய முஜீப், வங்கதேச அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், உலகக்கோப்பை தகுதி சுற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் முஜீப்.