லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருக்கும் ஜாப்ரா ஆர்சர், எந்த அற்புதங்களும் நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்கு ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் காயத்தால் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. நாளை லார்ட்ஸில் தொடங்கும் 2-வது டெஸ்டில் ஜாப்ரா ஆர்சர் அறிமுகம் ஆகிறார். சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எந்தவித அதிசயத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்று ஜாப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டிக்கான சிகப்பு பந்தில் அதிகமான போட்டியில் விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அனால், நான் ஒயிட் பந்தில் விளையாடியதை விட ரெட் பந்தில்தான் அதிகமாக விளையாடியுள்ளேன். எப்படி இருந்தாலும் முன்னுரிமை கொடுக்கும் கிரிக்கெட் இதுவாகும்.

ரெட் பந்து போட்டிகள் டிவி-யில் ஒளிபரப்புவது இல்லை. இதனால் ஏராளமான மக்களுக்கு இதுபற்றி தெரியாது. சசக்ஸ் அணிக்காக எனது கிரிக்கெட்டை தொடங்கும்போது முதல் ஆட்டம் ரெல் பந்தில்தான்.

ஜாப்ரா ஆர்சர்

எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்காதீர்கள் என்பதை நான் திட்டவட்டமாக கூறுவேன். என்னுடைய அறிமுக டெஸ்ட் மிகவும் விரைவில் வந்துள்ளது. ஆடுகளத்தில் களமிறங்கி என்னால் என்ன முடியுமோ, அதை செய்ய வேண்டும். அதிசயம் நடக்கும் வகையில் என்னால் பயிற்சி மேற்கொள்ள இயலாது. அப்படி நடக்க முடியற்சி செய்வேன்.

ஆனால், அதைப்பற்றி சிந்திக்க மாட்டேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை மட்டும்தான் வெளிப்படுத்த முடியும்’’ என்றார்.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.

ஆஸ்திரேலியா: பான் கிராப்ட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லயன், ஹேசில்வுட் அல்லது மிட்செல் ஸ்டார்க். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...