முதல் தர கிரிக்கெட் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லுக் ரைட் 1

முதல் தர கிரிக்கெட் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லுக் ரைட்.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லூக் ரைட் தற்போது முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் இங்கிலாந்து நாட்டின் ஆல்ரவுண்டர் அவர். தற்போது முதல் தர போட்டியில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சசெக்ஸ் கவுண்டியில் அணிக்காக கடந்த பல வருடங்களாக ஆடிவந்தார். தற்போது வரை அந்த அணிக்காக 144 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார்.முதல் தர கிரிக்கெட் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லுக் ரைட் 2

மேலும், 7 ஆயிரத்து 662 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 38.11 ஆகும் . இதில் 17 சதங்களும் 38 அரை சதங்களும் அடங்கும். மேலும் ,2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை சசெக்ஸ் அணிக்காக கேப்டனாக இருந்துள்ளார். அதனை தாண்டி அதிகபட்சமாக 226 ரன்கள் விளாசி உள்ளார் .

ஆல்ரவுண்டர் என்பதால் 120 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் .அதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் பேசியதாவது…

என்னுடைய முதல் தர போட்டியில் எங்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். முதல் தர போட்டியில் நன்றாக ஆடும் என்னை குறுகிய ஓவர் போட்டிகளில் ஆடும் வீரர் என பலர் கூறியுள்ளனர். நான் முதன்முதலாக சசெக்ஸ் அணியில் இணைந்த போது பெருமிதமாக உணர்ந்தேன். அந்த அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளேன். தற்போதைய முதல் தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நான் அதனை வரும் நாட்களில் மிஸ் செய்வேன்.

முதல் தர கிரிக்கெட் வீரர் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லுக் ரைட் 3
NOTTINGHAM, ENGLAND – APRIL 22: Luke Wright of Sussex bats during Day Two of the Specsavers County Championship Division Two match between Nottinghamshire and Sussex at Trent Bridge on April 22, 2017 in Nottingham, England. (Photo by Harry Hubbard/Getty Images)

இவர் கடந்த 2003 முதல் சசெக்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 2004 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசெக்ஸ் அணி 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டு கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 34 வயதாகும். அவர் ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டியிலும் தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *