டெல்லி குடியரசு தலைவா் மாளிகையில், நடைபெற்று வரும் விழாவில் பதம் விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனி பதம் பூஷன் விருது பெற்றாா்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக் கூடிய நபா்களுக்கு மத்திய அரசு சாா்பில் பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக இன்று வழங்கப்பட்ட விழாவில் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட முக்கிய நபா்கள் விருதுகளை பெற்றனா்.
Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS
ரசிகர்கள் மனதில் நீங்காத நினைவாக அமைந்துள்ள இதே தினத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
பத்மபூஷன் விருதை பெற்ற மற்ற 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள் – சி.கே. நாயுடு, எம்.கே. விழியநகரம், வினூ மங்கட், சுனில் கவாஸ்கர், டி.பி. டியோதார், லாலா அமர்நாத், கபில் தேவ், சந்து போர்டே, ராகுல் டிராவிட்.
3 பத்ம விபூஷன் விருதுகள், 9 பத்ம பூஷண் விருதுகள், 72 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டாம் கட்டமாக 42 போ் இன்று பத்ம விருதுகளை பெற்றனா். இதில் இந்திய கிாிக்கெட் அணியின் நட்தகத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினாா்.
விழாவில் தோனி ராணுவ உடையில் மிடுக்கான நடையுடன் வந்து விருதினை பெற்றுக் கொண்டாா். கடந்த 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இதே நாளில் உலககோப்பை ஒருநாள் தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக 7 வருடங்களுக்கு முன்னதாக 2011-ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, 91 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் தனது பாணியில் அதிரடியாக சிக்ஸர் அடித்து இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை அடிப்பதற்கு முன்பே, 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணிக்கு வாங்கிக்கொடுத்தார் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல், 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது.