மலிங்காவிற்க்கு வயது ஆகிவிட்டது : தவான் குதூகளம்

மலிங்காவிற்க்கு வயது ஆகிவிட்டது

மலிங்காவினால் தற்போது முன்னர் போல் பந்து வீச முடியவில்லை அவருக்கு வயது ஆகிவிட்டது அதானால் முன்னர் இருந்த வேகம் தற்போது அவரிடம் இல்லை என சிகர் தவார் கூறியுள்ளார். இது என்னுடைய கருத்து எனவும் தெளிவுபடுத்தியுள்ளார் சிகர் தவான். மலிங்காவிற்க்கு தற்போது 33 வயதாகிறது. அவர் ஆடிய இந்தியவுடனான ஒரு நாள் போட்டி அவருக்கு 200ஆவது ஒரு நாள் போட்டியில் ஆடினார். இன்னும் இரண்டும் விக்கெட்டுகள் வீழ்த்தினாள் அவர் ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை நிறைவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான முதல் ஒரு நாள் போட்டியில் 8 ஓவர்கல் வீசிய லசித் மலிங்கா 52 ரன் வாரிக்கோடுத்தார். அது மட்டுமில்லாமல் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் அவர் 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார் மலிங்கா. ஜிம்பாப்வே உடனான ஒரு நாள் தொடரிலும் இலங்கை மண்னை கவ்வியது. அந்த ஒரு நாள் தொடரிலும் மலிங்கா பெரிதாக சோபிக்கவில்லை.

Sri Lankan cricketer Lasith Malinga looks on during the first One Day International (ODI) cricket match between Sri Lanka and India at the Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on August 20, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI

90 பந்துகளில் 132 ரன் அடித்து ஆட்டனாயன் விருதை பெற்றார் சிகர் தவான். அவர் மேலும் மலிங்காவை பற்றி கூறியதாவது,

ஆமா கண்டிப்பா அவருக்கு வயசு ஆய்ருச்சு, அவரோட வேகம் குறைந்துவிட்டது. நாங்கள் எளிதாக அவரை தற்போது ஆட முடியும். அவர் நிறைய வருடங்கள கிரிக்கெட் ஆடிவிட்டார். இது வாழ்க்கையில் வழக்கமாக நடக்க  கூடியது தான்  

– சிகர் தவான்

மலிங்கா இதுவரை இலங்கை அணிக்காக 298 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 38.50 சராசரியில் 298 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சிக்கனமாகவும் ஓவருக்கு 5.29 ரன் மட்டுமே கொடுத்துள்ளார் இதுவரை. டி20 போட்டிகள் 89 ஆடியுள்ளார் மலிங்கா அதில் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஒய்வு பெற்று விட்டர் மலிங்கா. அதில் 30 போட்டிகளில் ஆடி 33.15 சராசரியில் 101 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

உபுல் தரங்கா தலைமையிளான இலங்கை அணி நாளை மறுநாள் பல்லேகேலேவில் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்த போட்டியையாவது வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களம் இறங்கும் என் எதிர் பார்க்கப்படுகிறது.

Editor:

This website uses cookies.