முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தாமதம்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த இந்திய வீரர்கள் கேட்டுள்ளார்கள். ஆனால், 2016-17இல் விளையாடியதற்காக முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஒடிசா, அசாம், திரிபுரா, ஐதராபாத் மற்றும் சில மாநிலத்தில் இருக்கும் வீரர்கள் சில போட்டிகளுக்கான சம்பளத்தை மட்டுமே பெற்றுள்ளார்கள், முழு சம்பளத்தையும் இன்னும் பெறவில்லை என தகவல் வந்தது.

ரஞ்சி டிராபியில் விளையாடும் முதல் தர கிரிக்கெட் வீரருக்கு ஒரு போட்டிக்கு 40,000 ரூபாய் சம்பளம், அந்த சம்பளத்தை அந்த மாநிலத்தின் கிரிக்கெட் வாரியம் வழங்கும். விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) ஒரு போட்டிக்கு 10,000 ரூபாய் சம்பளமும் மற்றும் சையத் முஷ்டாக் அலி (டி20 தொடர்) ஒரு போட்டிக்கு 5000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.

Delhi’s Rishabh Pant hero of day take selfi alond with his fans after 4thDay play against Maharashtra during Ranji held at Wankhade stadium,churchgate on Sunday.
Express photo by Kevin DSouza, Mumbai 16-10-2016

2016-17 சீசனுக்கான அசாம் வீரர்கள் பெற வில்லை என அசாம் அணி தகவல் அளித்தது, அதன் பிறகு அசாம் வீரர்களுக்கு ரஞ்சி டிராபி போட்டிக்கான சம்பளத்தை வழங்கி விட்டார்கள்.

“இது வீரர்களுக்கு கடினமாகவே இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர்களது ரஞ்சி டிராபி சம்பளத்தை பெற்றார்கள். இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள் பல வீரர்கள் உள்ளார்கள். அவர்களது சம்பளம் தாமதமாக என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்னும் விஜய் ஹசாரே டிராபி மற்றும் டி20 தொடருக்கான சம்பளத்தை எங்களுக்கு வரவில்லை,” என அசாம் அணி கூறியது.

Murali Vijay of India compleating his century during day two of the 2nd test match between India and Sri Lanka held at the Vidarbha Cricket Association Stadium, Nagpur on the 25th November 2017Photo by Prashant Bhoot / BCCI / Sportzpics

சம்பளம் தாமதம் ஆகுவதற்கு என்ன காரணம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள் முதல் தர வீரர்கள். “நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். ஒரு சீசன் முடிந்து ஒரு மாதத்தில் எங்களது சம்பளத்தை பெற்று விடுவோம். சில கிரிக்கெட் வாரியங்கள் போட்டி முடிந்த உடன் சம்பளம் கொடுப்பார்கள், சிலர் சீசன் முடிந்த பிறகு கொடுப்பார்கள்,” என வீரர்கள் கூறினார்கள்.

வீரர்களுக்கு நேரடியாக சம்பளம் தர இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்கிறது. சில அணிகள் சம்பளத்தை பெற்று விட்டது, இன்னும் சில அணிகள் சம்பளத்தை பெறவில்லை.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.