அதிவேகமாக 6000 ரன்கள்.. மார்டின் கப்டில் சாதனை!! 1

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் மார்டின் இடத்தில் 157 ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் குவித்து தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக தோனி 166 ஆட்டங்களில் 6000 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல் ரோகித் சர்மா 6000 ரன்கள் எடுக்க 162 ஆட்டங்களை எடுத்து கொண்டார். இந்நிலையில் வெறும் 157 போட்டிகளில் 6000 ரன்கள் அடித்தது மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் கப்டில். இந்தியாவின் கேப்டன் விராட் கோலி 136 ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் நியூஸிலாந்தின் மெளண்ட் மெளன்கனியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்துள்ளது.

அதிவேகமாக 6000 ரன்கள்.. மார்டின் கப்டில் சாதனை!! 2

தொடக்க வீரர் கப்தில் 139 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் குவித்தார். கேப்டன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏழாவதாகக் களமிறங்கிய ஜிம்மி நீஷம் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்ததுதான் இலங்கை அணியை மேலும் நோகடித்துள்ளது.

49-வது ஓவரை வீசிய திசாரா பெரேரா பந்துவீச்சு அவருக்கு லட்டு போல அமைந்தது. அந்த ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். முதல் நான்கு பந்துகளில் நீஷம் சிக்ஸர் அடிக்க 5-வது பந்தை நோ பாலாக வீசினார் பெரேரா. இதனால் அடுத்தப் பந்தை சிக்ஸுக்கு அனுப்பினார். கடைசிப் பந்தில் நீஷமால் சிக்ஸ் அடிக்கமுடியாமல் போனது. 34 ரன்கள் கொண்ட ஓவராக அமைந்தது அது. இதனால் 350 ரன்கள் கிடைக்கும் என்கிற நிலையில் இருந்த நியூஸிலாந்து அணி கடைசியில் 371 ரன்கள் குவித்தது.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 371 ரன் குவித்துள்ளது.அதிவேகமாக 6000 ரன்கள்.. மார்டின் கப்டில் சாதனை!! 3

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடரின் முதல் போட்டி, மவுண்ட் மான்கானுயி-யில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. அதன்படி, வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி பந்துவீசியது.

 

நியூசிலாந்து அணி, இலங்கை பந்துவீச்சை சிதறடித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடியில் நியூசிலாந்து அணி, 7 விக்கெட்டை இழந்து, 371 ரன் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 138 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 76 ரன்னும் ரோஸ் டெய்லர் 54 ரன்னும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஸம், 49 ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் அடித்து மிரட்டினார். அவர் 13 பந்தில் 47 ரன் எடுத்தார்.

இலங்கை தரப்பில் மலிங்கா, பெரேரா, பிரதீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 372 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் டிக்வெல்லாவும் குணதிலகாவும் ஆடி வருகின்றனர். இலங்கை அணி கடந்த 2 ஆண்டுகளில் 44 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 33 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *