உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வங்கதேச அணியின் கேப்டன் மஸ்ரபி மர்டஸா தான் இன்னும் முடிவு செய்யவில்லை, எனவும் ஓய்வு பெற இன்னும் சில காலம் வேண்டும் நேரம் கொடுங்கள் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருந்தாலும் இவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டேதான் இருக்கிறது. சென்ற வருடம் வங்கதேச அணி சொந்த நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. அது முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஓய்வு பெற வில்லை. அதன் பின்னர் உலக கோப்பை தொடர் வந்தது.
உலக கோப்பை தொடரிலும் வங்கதேச அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால், வங்கதேச அணியில் பந்துவீச்சாளராக மட்டுமே செயல்படும். அவர் உலக கோப்பை தொடரில் சரியாக செயல்படவில்லை. இவ்வாறாக அந்த அணி கடுமையாக சொதப்பியது. கேப்டனாகவும் தவறான முடிவுகளை எடுத்தார்.
இதன் பின்னர் கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் அவரை ஓய்வு பெறச் சொல்லி மறைமுகமாக அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அதனை, தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவர் நிரந்தரமாக ஓய்வு எடு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் தனது ஓய்வு குறித்து செய்திகளை பரப்பி உள்ளார் அவர்.

மேலும், தான் உடனடியாக ஓய்வு பெறவில்லை எனவும், அதற்கு இன்னும் சில காலம் நேரம் கொடுங்கள் எனவும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரியிடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை மஸ்ரபி மர்டஸா மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு இடையே ஒரு மீட்டிங் நடைபெற்றது.
இந்த மீட்டிங்கில் அவர் இந்த அனும்தியை அவரிடம் கேட்டிருக்கிறார். இப்படிப் பார்த்தால் அடுத்த 2020 ஆம் ஆண்டு வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட திட்டத்தில் இருப்பதாக ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். இதனால் இளம் வீரர்களுக்கு வழிவிடாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் இவர் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.