இந்தியா - பாகிஸ்தான்: மைதானத்தில் மழை பெய்யுமா? வானிலை கூறுவது என்ன? 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராப்ஃபோர்டு மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணியானது அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தனது பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது விராட் கோலி படை

இந்தியா - பாகிஸ்தான்: மைதானத்தில் மழை பெய்யுமா? வானிலை கூறுவது என்ன? 2

போட்டி நடைபெறும் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதால் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு மொகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 105 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் அடுத்த ஆட்டத்தில் பட்டம் வெல்லக்கூடிய வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.இந்தியா - பாகிஸ்தான்: மைதானத்தில் மழை பெய்யுமா? வானிலை கூறுவது என்ன? 3

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து தனது 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிற்பாதியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபார செயல்திறனை வெளிப்படுத்தினர். அதிலும் மொகமது அமிர் 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் கட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால் மோசமான பேட்டிங் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோல்விடைய நேரிட்டது.

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரை மழையின் குறுக்கீடு ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் ரத்தாகியுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மல்லுகட்டும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான். அங்கு பிற்பகலில் லேசான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்த சில மணி நேரங்களில் மான்செஸ்டர் நகரில் சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. இது உலகம் முழுவதும் இருந்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வந்துள்ள ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருந்தது.

ஆனால் மான்செஸ்டர் நகரில் இன்று பிற்பகலில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *