கலவரம் இருக்கக் கூடாது : பைக்ராப்ட்

கலவரம் இருக்கக் கூடாது

இந்தியா இலங்கை 4ஆவது போட்டி நாளை மறுநாள் கொலும்புவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் 3ஆது போட்டியில் ஏற்ப்பட்டதைபோல தேவையிள்ளாத கலவரம் இருக்காது என் உறுதி கொடுங்கள் என போட்டியின் நடுவர் ஆண்டி பைக்ராப்ட் கோரிக்கை வைத்துள்ளார். இன்ஃப்ஹியா இலங்கை இடயேயான 3ஆவது போட்டி நேற்று முன்தினம் பல்லகேலேவில் நடந்தது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கு இடையே இலங்கை ரசிகர்கள் ரகளை செய்தனர். இந்திய – இலங்கைக்கு இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.

45-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளதை அறிந்த இலங்கை ரசிகர்கள் பலரும் மைதானத்தில் தங்களிடமிருந்த பாட்டில்களை தூக்கி ஏறிந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.மைதானத்துக்குள் கலவரத் தடுப்பு போலீஸார் வரவழைக்கப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.இதனால் இந்தியாவின் வெற்றி 35 நிமிடங்கள் தள்ளி போனது.

இலங்கை அணிவீரர்கள் பலரும் கவலை படிந்த முகத்துடம் மைதானத்தில் குழுமியிருந்தனர். இதனால் அடுத்த போட்டிகளில் இதுபோன்ற கலவரம் மற்றும் சம்பவங்கள் நடைபெற கூடாது. அதற்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என உத்திரவாதம் கேட்டுள்ளோம்.  – ஆண்டி பைக்ராப்ட்

ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பும்ராவின் பந்து வீச்சு வேகத்தில் இலங்கை அணி திணறியது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

 

 இலங்கை அணியில் அதிகப்பட்சமாக லஹிரு திரிமன்னெ 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்துள்ளனர்.

Editor:

This website uses cookies.