ஐபிஎல் கிரிக்கெட்டில் எனக்கு மறக்கமுடியாத நிகழ்வாக சக வீரர் மேத்யூ ஹைடன் வைத்திருந்த மங்கூஸ் பேட்டை பற்றி கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக களமிறங்கி ருத்ரதாண்டவம் ஆடியவர் மேத்யூ ஹைடன். கிரிக்கெட் வீரர்கள் ஊரடங்கு மூலமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருப்பதால் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர்.
இந்த நேரத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் லீடர் மேத்யூ ஹைடன், சுரேஷ் ரெய்னாவிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டார். அப்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது தன்னுடன் ஆடிய மிகச்சிறந்த தருணத்தை பகிர்ந்து கொள்ளும்படி அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த சுரேஷ்ரெய்னா… இந்த பேட்டுடன்தான் எனக்கு மிகச் சிறந்த ஐபிஎல் தருணங்கள் இருக்கிறது. இந்த பேட்டை எனக்கு தந்ததற்கு எனது சகோதரருக்கு நன்றி. இதை பொக்கிஷம் போன்றதாகும். என்னுடைய கலக்ஷனில் இது எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக மேத்யூ ஹைடன் 43 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் 9 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும். இதே போட்டியில் மேத்யூ ஹைடன் மங்கூஸ் பேட்டை வைத்து ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த பேட் மிகவும் குட்டையாகவும் கைப்பிடி மட்டும் நீளமாகவும் இருக்கும். இந்த பேட்டை வைத்து மேத்யூ ஹெய்டன் விளையாடி அந்த சீசன் முழுவதும் ரசிகர்களை கொண்டாட வைத்தார்.
இந்த போட்டியில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.. அதே போட்டியில் ஹைடனுடன் சேர்ந்து 78 ரன்கள் விளாசித் தள்ளினார். இதுகுறித்து கூறிய சுரேஷ் ரெய்னா… ‘டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற உங்களது ஒரு ஆட்டத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அதில் நீங்கள் மங்கூஸ் பேட்டை 93 ரன்கள் விளாசினீர்கள். ஒவ்வொரு பந்தும் மைதானத்திற்கு வெளியே பறக்கவிடப்பட்டது”. ”அந்த போட்டியில் நாம் இருவரும் சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப் அளித்தோம், நான் அதையே போட்டியில் 49 ரன்கள் விளாசினேன்.”
இதுவே உங்களுடன் சேர்ந்து நான் ஆடிய ஆட்டங்களின் மிகச்சிறந்த ஆட்டமாகு.ம் நீங்கள் கையெழுத்து இட்டு அளித்த அந்த பேட் என்னிடம் தற்போதும் உள்ளது. எனக்கு கொடுத்த அந்த பேட்டை பற்றி இன்னும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
Golden memories of @IPL with my brother @HaydosTweets. Thanks for this precious bat, it will always top my collection. @ChennaiIPL pic.twitter.com/I1JvFZSyPO
— Suresh Raina?? (@ImRaina) April 13, 2020