தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அயர்லாந்தின் ஆல்-ரவுண்டர் மேக்ஸ் சோரென்சென் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2012 – 2016 இல் 13 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.காயம் காரணத்தினால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை.
தென்னாபிரிக்காவில் பிறந்த இவர் அயர்லாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கொடுத்ததற்கு அயர்லாந்து அணிக்கு நன்றி தெரிவித்தார். நான் அயர்லாந்து அணிக்கு நன்றி கூறி தொடங்குகிறேன் என மேக்ஸ் சோரென்சென் தெரிவித்தார்.
“நான் அயர்லாந்து அணிக்கு நன்றி கூறி தொடங்குகிறேன். என் வாழ்க்கையில் பல அனுபவங்கள் மற்றும் நண்பர்களை பெற்றுள்ளேன்,” என சோரென்சென் கூறினார்.
“இந்த நேரத்தில், என் வாழ்க்கையோடு செல் என தோன்றுகிறது. கடந்த சில வருடங்களில் காயங்கள் என் கிரிக்கெட்டை பாதித்து விட்டது,” எனவும் கூறினார்.
“இந்த நேரத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதுதான் சரி. மீண்டும் ஒரு முறை நான் அயர்லாந்து அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு உதவியாகவும் பக்க பலமாகவும் இருந்தார்கள்,” என சோரென்சென் தெரிவித்தார்.
“எங்கள் அணி சார்பாக, மேக்ஸ் சோரென்செனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். எங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு அவர் தான் முன்மாதிரி. அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்,” என அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் பிரேஸ்வெல்.