டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வாலுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வாலின் தாக்குதல் ஆட்டம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தேர்வு செய்யப் படுவதற்கான கதவுகளை திறந்து ள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.
2020-ம் ஆண்டு தொடக்கத் தில் இந்திய அணியானது நியூஸி லாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கு முன்ன தாக தொடக்க வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா தன்னை புத்துணர்ச்சி பெற செய்து கொள் ளும் விதமாக, அடுத்த மாதம் நடை பெற உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படக்கூடும் என தெரிகிறது.
இது நிகழும் பட்சத்தில் தேர்வுக் குழுவினர் பார்வை மயங்க் அகர் வால் மீது விழக்கூடும். ரோஹித் சர்மா, உலகக் கோப்பை தொடரில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்கவில்லை.
துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, நியூஸிலாந்தில் நடைபெற உள்ள 5 டி 20 ஆட்டங் கள், 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அணியின் திட்டங்களில் முக்கிய அங்கமாக இருப்பார் என்பது குறிப் பிடத்தக்கது. தற்போதைய சூழலில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான ஒருநாள் கிரிக் கெட் போட்டித் தொடரில் தேர்வுக் குழுவினரின் விருப்பமான தேர் வாக மயங்க் அகர்வால் இருக்கக் கூடும்.
மயங்க் அகர்வால் லிஸ்ட் ஏ போட்டிகளில் சராசரி 50.90 உடன் 13 சதங்கள் விளாசியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 101.57 ஆகவும் உள்ளது. ஷிகர் தவணின் மோசமான பார்மும் மயங்க் அகர்வால் தேர்வு செய்யப் படுவதற்கு ஆதரவான காரணியாக உள்ளது. இங்கிலாந்தில் நடை பெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி கட்டத்தில் மாற்று வீரராக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நடவடிக்கையானது ஒரு நாள் போட்டிகளுக்கான திட்டங் களில் தாக்குதல் ஆட்டம் தொடுக் கும் மயங்க் அகர்வால் இருப் பதையே சுட்டிக் காட்டுகிறது. ஷிகர் தவணின் பார்மும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடை பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இப்போதே மயங்க் அகர்வாலை சிறந்த முறையில் உருவாக்கலாம் என்ற கருத்தை கிரிக்கெட் விமர்சகர் கள் முன் வைக்காமல் இல்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆய்வாளருமான தீப் தாஸ்குப்தா கூறுகையில், “இந்திய அணி நிர்வாகம் மயங்க் அகர்வாலை ஒருநாள் போட்டி களில் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என திட்டம் வைத்திருந் தால் அது சிறப்பான விஷயம். உண்மையிலேயே மயங்க் அகர் வால் குறுகிய வடிவிலான போட்டி களுக்கான வீரர்தான். தேவையை கருதி சிவப்பு நிற பந்துக்கு (டெஸ்ட் போட்டி) தகுந்தபடி தன்னை தகவமைத்துக் கொண்டார்.
மயங்க் அகர்வாலின் திறமை ஒரு போதும் கேள்விக்கு உட்படுத்தப் பட்டது இல்லை. டிரைவ்களில் இருந்து பேட்டை கிடைமட்டமாக வைத்து ஷாட்கள் மேற்கொள்வதில் சிறந்தவர். முந்தைய ஆட்டங்களில் அவர் இதுபோன்று விளையாடியது இல்லை. ஆனால் இனிமேல் அதுபோன்று இருக்காது” என் றார்.
மயங்க் அகர்வால் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 10 டெஸ்ட் போட்டிகளை முடிப்பதற்கு முன்பே 2 இரட்டை சதங்கள் விளாசி அசத்தியுள்ளார். அதிலும் வங்கதேச அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 8 இமாலய சிக்ஸர்களுடன் மயங்க் அகர்வால் 243 ரன்களை சேர்த்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.