முன்னாள் இந்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் அகமது கானின் தம்பி முசீர் கானை மும்பை கிரிக்கெட் வாரியம் மூன்று வருடத்திற்கு தடை செய்துள்ளது. மைதானத்தில் தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதாலும் தேவையில்லாத ஒழுங்கு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாலும் இந்த நடவடிக்கையை மும்பை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.
இவருக்கு தற்போது 14 வயதான அவர் இடது கை சுழற்பந்து வீச்சாளராக வலது கை பேட்ஸ்மேனாகவும் விளங்கி வந்தார். மும்பை 15 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் ஆடிவரும் அவர் நல்ல திறமை வாய்ந்தவர். தனது அண்ணனை போலவே இந்திய அணியில் ஆட வேண்டும் என்ற ஆசை கொண்டவர்.
தற்போது அவர் 14 வயதில் தடை செய்யப்பட்டுள்ளதால். 17 வயது வரை எந்த ஒரு கிரிக்கெட் அணியிலும் அவரால் ஆடமுடியாது. இதன் காரணமாக அவரது வாழ்க்கை கிட்டத்தட்ட கேள்விக்குறியாகியுள்ளது அதுவரை அவர் தனது வீட்டிலேயே பயிற்சிகளுடன் இருக்க வேண்டும்.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறியதாவது….
அந்த சிறுவன் மிகவும் திறமை வாய்ந்த தான் இந்த தண்டனையை அவனுக்கு அளிக்கும் போது எனது மனம் வருந்தியது. ஆனால் இவன் ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது. மேலும் ஒரு கேப்டனாக அணியை தலைமை தாங்கி நடத்தி அனைவருக்கும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதனை அவர் செய்யத் தவறிவிட்டார் இதன் காரணமாக இந்த தடையை அவருக்கு அளிக்கிறேன் மைதானத்தில். அவர் உள்நோக்கம் கொண்டு நடந்து கொண்டுள்ளார் என்று கூறினார் அவர்.
முசீர் கான் மும்பை 15 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டன் ஆவார். அவர் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது என மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
தனது அண்ணனை போலவே எப்படியாவது இந்திய அணிக்காக ஆடி விட வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையான பயிற்சி எடுத்து வந்தார் அவர். அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது. இப்படி நடந்துகொண்டால் உடனடியாக அவருக்கு ஒரு நோட்டீஸ் அடித்து இதுகுறித்து வார்னிங் செய்திருக்க வேண்டும் ஆனால் திடீரென எடுத்தவுடனேயே மூன்று வருட தடை மிகவும் அதிகமானது என்று கூறினார் அவரது தந்தை.