டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்துள்ளது!! 1

மும்பை இந்தியன்ஸ் : சூர்யகுமார் யாதவ், கெய்ரோன் போல்லார்ட், ரோஹித் சர்மா (கே), ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷான் (கீ), ஜீன்-பால் டுமினி, க்ருணல் பாண்டியா, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான், மாயன்க் மார்க்கண்டே, ஜாஸ் ப்ரிட் பம்ரா, கியரோன் போலார்ட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிரெண்டன் மெக்கல்லம், விராட் கோலி(கே), டி காக்  (கீ), மனன் வோரா, மன்டிப் சிங், கொலின் டி கிராண்ட்ஹோம், வாசிங்டன் சுந்தர், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யூசுெந்திரா சாஹால், கிறிஸ் வோக்ஸ், 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக் கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புத்துணர்ச்சியடைந்துள்ள மும்பை அணி விராட் கோலி, பிரண்டன் மெக்கலம், குயிண்டன் டி காக் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்துள்ளது!! 2

அதேவேளையில் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்து துவண்டுள்ளது.

இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளே பெற்றுள்ள போதிலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி (+0.033) 6-வது இடம் வகிக்கிறது. பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் (-0.447) ஆக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதில் அதிகப் படியான சிக்கலை சந்திக்கக்கூடும்.டாஸ் வென்ற மும்பை பந்து வீச தேர்வு செய்துள்ளது!! 3

இந்த சீசனில் இரு அணிகளும் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த 17-ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது.

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *