ஐபிஎல் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சித்தேஷ் லாட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கொல்கத்தாவுக்கு மாறினார் சித்தேஷ் லாட்
சித்தேஷ் லாட்
2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடருக்கான வீரர்கள் மாற்றத்திற்கான கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. சித்தேஷ் லாட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே மயங்க் மார்கண்டேவை வெளியேற்றியுள்ளது. சித்தேஷ் லாட் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், தவால் குல்கர்னி ஆகியோரை ஏற்கனவே மற்ற அணிகளில் இருந்து வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.
அணிகள் இடையே நடைபெற்ற வீரா்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே தில்லி கேபிடல்ஸ் அணிக்கு இடம் பெயா்ந்தாா். அவருக்கு பதிலாக தில்லியின் ஸ்பின்னா் மயங்க் மாா்கண்டே, ஆல்ரவுண்டா் ராகுல் தேவதியா ஆகியோா் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளனா். பஞ்சாப் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.

ஐபிஎல் 2020 போட்டிக்கான வீரர்கள் பரிமாற்றத்தின் முழுப் பட்டியல்:
வீரர்கள் | முந்தைய அணி | மாறிய அணி |
அஸ்வின் | பஞ்சாப் | தில்லி |
ரஹானே | ராஜஸ்தான் | தில்லி |
ஜெகதீசா சுஜித் | தில்லி | பஞ்சாப் |
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் | தில்லி | மும்பை |
மயங்க் மார்கண்டே | மும்பை | தில்லி |
அங்கித் ராஜ்புத் | பஞ்சாப் | ராஜஸ்தான் |
கே. கெளதம் | ராஜஸ்தான் | பஞ்சாப் |
டிரெண்ட் போல்ட் | தில்லி | மும்பை |
ராகுல் டேவாடியா | தில்லி | ராஜஸ்தான் |
தவல் குல்கர்னி | ராஜஸ்தான் | மும்பை |
சித்தேஷ் லேட் | மும்பை | கொல்கத்தா |