டி 20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார். பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதிலாக வியர்வையை வீரர்கள் பயன்படுத்தலாம். வியர்வை மூலம் கோவிட் -19 பரவும் என்று யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
13 ஆவது ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த டி 20 உலகக்கோப்பைத் தொடரும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடைபெற வேண்டுமா அல்லது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டுமா என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. டி 20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
டி 20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
டி 20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் லைவில் பேசியதாவது, “ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக டி 20 உலகக் கோப்பை தொடரை ஐசிசி தாமதப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை டி 20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவில்லை என்றால் ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான முழு சுதந்திரமும் பிசிசிஐயிடம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய மைக்கேல் ஹோல்டிங், “பந்தை பளபளப்பாக்க பவுலர்கள் எச்சிலை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது பெரிய பிரச்னை என்று நான் நினைக்கவில்லை. இந்தத் தடையில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிரிக்கெட் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் தடவாமல் மாற்று வழியை கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்பட சிறிது நேரம் எடுக்கும்.
எச்சிலுக்கு பதிலாக வியர்வையை வீரர்கள் பயன்படுத்தலாம். உங்கள் கை அல்லது நெற்றியில் இருந்து வரும் வியர்வை எச்சிலைப் போல வேலை செய்யும். வியர்வை மூலம் கோவிட் -19 பரவும் என்று யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. எச்சிலை தடை செய்வதில் எந்த நடைமுறை சிக்கலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதே நேரம் வீரர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவருவது கொஞ்சம் கஷ்டம் தான், அதைச் செய்யாமல் வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்