சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் சென்னை வீரர் நியமனம் 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் சென்னை வீரர் நியமனம்

ஒவ்வொரு அணியும் தங்கள் தக்க வைக்கும் வீர்ரகள் பட்டியலை வெளியிட இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமாக வேலை செய்து வருகின்றன. மேலும், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஐபிஎல்11 தொடருக்கான வீர்ரகள் ஏலம் நடைபெறுகிறது.தொடர்புடைய படம்

இதற்காகவும் வீர்ரகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.அதே போல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது.

இதற்காக அந்த அணிகள் மீண்டும் தங்கள் அணியை வலிமையாக கட்டமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதற்காக சென்னை அணி தற்போது பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரரை மைக் ஹசியை நியமிக்க உள்ளதாக தெரிகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் சென்னை வீரர் நியமனம் 2

மைக் ஹசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சீசனில் இருந்து ஆடி வருகிறார். கடந்த 2008ல் இருந்து 2013ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக ஆடிய அவர் 2014ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டு மும்பை அணியால் வங்கப்பட்டார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு மீண்டும் சென்னை அணியால் திரும்பி வங்கப்பட்டர். சென்னை அணிக்காக 69 போட்டிகளில் ஆபியுள்ள மைக் ஹசி மொத்தம் 1977 ரன்கள் அடித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் சென்னை வீரர் நியமனம் 3

 

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஒரு அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 3 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *