ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பங்கு பெறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல் தொடருக்குப் பதிலாக இங்கிலாந்து கவுண்ட்டியான சர்ரியில் முழு சீசனும் ஆடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளை விட்டு விட்டு சென்று வேறு தொடரில் ஆடுவதைப் பார்ப்பது சற்று புதிதான ஒன்றாகும். இங்கிலாந்து வீரர்களே பணம் புழங்கும் ஐ.பி.எல் தொடரில் ஆட வருகின்றனர். ஆனால், மற்றொரு நாட்டு வீரர் ஐ.பி.எல் க்கு பதிலாக இங்கிலாந்து கவுன்ட்டியில் ஆடுவது பார்ப்பதற்க்கு அரிதாக உள்ளது.
இந்த வருட ஐ.பி.எல் தொடர் சற்று விதயாசமானது, அனைத்து வீரர்களுக்கு சேத்தே ஏலம் நடைபெறும். அப்படிப் பார்க்கும்போது மிட்செல் மார்ஷ் போன்ற ஆல் ரவுண்டருக்கு நல்ல டிமேன்ட் கொடுத்து நல்ல விலைக்கு ஏல போவார். அதனை எல்லம் வேண்டாம் என்று கூறி இருக்கிறார் மிட்செல் மார்ஷ்.
ஐ.பி.எல் 10 இல் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார் மிட்செல் மார்ஷ். ஆனால் தொடர் துவகும் முன்பே காயம் காரணமாக தொடரில் இருந்து விளகினார். பின்னர் ஏலத்தில் விலை போகாமல் இருந்த இரான் தாகிர் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டார்.
இதனைப் பற்றி மிட்செல் மார்ஷ் கூறியதாவது,
இந்த வாய்ப்பு எனக்கு கிடத்தற்கு நான் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இங்கிலாந்து நாட்டின் சூழ்நிலைகளில் விளையாடுவது சற்று சவாலான ஒன்றாகு. சர்ரி அணியை இந்த வருடம் முழுவதும் பார்த்து வருகிறேன். இதனால் அணிக்கு சற்று வெற்றி வாய்ப்புகளை உறுவாக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இந்திய கேப்டன் விராட் கோலியு கவுன்டி ஆடும் வாய்பைப் பற்றி கூறியுள்ளார். வரும் காலங்களில் இந்திய அணி இங்கிலாந்திற்கு பயண செய்து விளையாடவுள்ளது இதன் காரணமாக அங்கு இங்கிலாந்து கண்டிசனை நன்றாக தெரிந்து வைப்பதன் மூலம் அந்த தொடர்களில் அணிக்கு நன்றாக உதவும் எனக் கூறியிருந்தார். ஆனால், அடுத்தடுத்து இந்திய அணிக்கு தொடரள் வந்து கொண்டே இருப்பதால் அவரால் எந்த ஒரு கவுண்டி அணிக்கும் ஆட முடியவில்லை.
மேலும், இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் செட்டேஷ்வர் புஜரா ஆகியோர் இந்த வருட கவுன்ட்டி சீசனில் சில் போட்டிகள் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மாவும் கவுண்ட்டி அணிக்காக ஆட அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.