ஐ.சி.சி., புதிய டி.20 தரவரிசை; பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடம் !!

ஐ.சி.சி., புதிய டி.20 தரவரிசை; பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடம்

சர்வதேச டி.20 கிரிக்கெட் அரங்கின் சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசையை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக இழந்தது.

இதனையடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டியிலும் கெத்தாக வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், சர்வதேச டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 109 ரன்கள் எடுத்து கொடுத்து பாகிஸ்தான் அணி தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமானவரான பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், ஜெட் வேகத்தில் 11 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது இதுவே முதல் முறை.

இது மட்டுமல்லாமல் கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு ஐ.சி.சி., டி.20 தரவரிசையில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர் முதலிடத்தை பிடித்திருப்பதை சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

786 புள்ளிகள் பெற்று பாபர் அசாம் முதலிடத்தை பிடித்துள்ளார்.  இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 784 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய கேப்டன் கோஹ்லி 776 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இதே போல் டி.20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தை சேர்ந்த மிட்செல் சாட்னர் 718 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் ரசித் கான் 717 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் சோதி 712 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் பும்ராஹ் 702 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Mohamed:

This website uses cookies.