இந்தியாவிற்கு வரமுடியாது எனக்கூறிய கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி; புதிய கேப்டனுடன் வருகிறது நியூசிலாந்து அணி; டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!

இந்தியாவுடன் டி20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணி வருகிற ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

முதற்கட்டமாக ஜனவரி 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. அடுத்ததாக ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகள் நடக்க இருக்கிறது.

மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி ஆகிய முன்னணி வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. தற்போது பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவரும் இருவரும் இந்தியாவுடன் நடக்கவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை என கூறியதால், அணி நிர்வாகம் அவர்களை எடுக்கவில்லை.

டி20 தொடருக்கு கேப்டனாக மிச்சல் சான்ட்னர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் தொடருக்கு கேப்டனாக டாம் லேத்தம் நியமிக்கப்பட்டுளார் என்கிற தகவல்களும் வந்திருக்கின்றன.

 

காயத்தில் இருக்கும் முன்னணி வீரர்கள்:

டி20 அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன் (முதுகுபகுதி காயம்), மேட் ஹென்றி (வயிறு காயம்), ஆடம் மில்னே (பக்கவாட்டில் காயம்) மற்றும் பென் சியர்ஸ் (பின்பகுதி காயம்) ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு வருவதால் டி20 தேர்வுக்கு இடம்பெறவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா தொடருக்கான நியூசிலாந்து டி20 அணி :

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி சிப்ளே, இஸ் சோதி, பிளேயர் டிக்னர்.

Mohamed:

This website uses cookies.