3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 1

ஆஸ்திரேலியாவின் புயல் வேகம் மிட்செல் ஸ்டார்க் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிராகா விளையாடிய போது அவருக்கு காலில் காயம் ஏற்ப்பட்டது.

3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 2

அதன் பின்னர் காயம் சரியாகும் வரை எந்த ஒரு தொழில் முறை கிரிக்கெட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. தற்போது அவருடை உள்ளூர் அணியான நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஜே.எல்.டி ஒருநால் தொடரில் விளையாட உள்ளார்.

அவருடைய வருகையைப் பற்றி ஆஸ்திரேலிய பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சகர் கூறியதாவது,

மிட்செல் ஸ்டார்க் ஒரு திறம் வாய்ந்த பந்து வீச்சாளர். அவர் அணியில் இருப்பது எப்போதும் ஒரு பெரிய கை இருந்தாற் போல் தான். வேகப்பந்து வீச்சாளர்கள் இது போன்ற முதல் தர போட்டிகளில் விளையாடுவது தான் சரி. அவர்கள் உள்ளூரில் அனைத்து போட்டிகளும் விளையாடிவிட்டு வரட்டும் அப்போது தான் தேருவார்கள் எனக் கூறினார்.

3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 3

ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் மூவரும் தான் தற்போது ஆசஷ் நம்பிக்கை பந்து வீச்சாளர்கள். மூவரும் தற்போது சரியான பாதையில் தயாராகி வருகிறார்கள்.

எனக் கூறினார்.

மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் போன்ற ஆஸ்திரேலியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியைத் தான் இந்தியா 4-1 என தோற்க்கடித்து உள்ளது. அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியில் இருந்திருந்தால் இந்தியா இந்த தொடரை மிகக் கடுமையாகப் போராடி தான் வெற்றி பெற வேண்டியிருக்கும்.

இந்நிலையில்,

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட். இந்தியாவிற்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஸ்டார்க் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார்.

3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 2

அதேபோல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட் வங்காள தேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். அதன்பின் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல்தான் நாதன் லயனும்.

3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 5

அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தற்போதில் இருந்தே ஆஷஸ் தொடருக்கான அணியை தயார் செய்வதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

3 மாதத்திற்குப் பிறகு விளையாடவுள்ள மிட்செல் ஸ்டார்க்!! 6ஸ்டார்க், லயன், ஹசில்வுட் ஆகியோர் அணிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்கள் என்பதால், மூன்று பேரும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்க விரும்புகிறது. இதனால் மூன்று பேரையும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி ஸ்டார்க் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறார். ஹசில்வுட் ஷெபீல்டு ஷீல்டு அணிக்காக விளையாடுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *