இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆகியோர் நட்பை பலமாக்கி வருகிறார்கள் என தெரிகிறது. கிரிக்கெட் விளையாடும்போது இருவரும் ஆக்ரோஷமாகவும், கிரிக்கெட்டை விட்டு வெளியே வந்தால் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர்.
ட்விட்டரில், ஒரு கிரிக்கெட் ரசிகர் ‘உங்களுக்கு பொறுத்த வரை தற்போதைய சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார்?’ என அந்த ரசிகர் கேட்டார். அந்த கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காமல் விராட் கோலியின் பெயரை சொல்லினர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தானின் முகமது அமீர் கூறினார்.இதனால், ட்விட்டரில் பரபரப்பு நிலவியது.
இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த வருடம், கிரிக்கெட் தாடையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்த முகமது அமீரை வாழ்த்தி, தன் பேட்டை முகமது அமீருக்கு பரிசாக கொடுத்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.