தலைசிறந்த அணிகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வங்காளதேச அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.

கடைசி ஏழு மாதங்களில் இரண்டு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளோம்
எங்களால் உடனடியாக வெற்றி பெற முடியாமல் இருக்கலாம்
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் வெற்றிகளை பெறுவோம்
இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காளதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்களில் படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியை அந்த அணி கேப்டன் மொமினுல் ஹக்கால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்றாலும், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் என்று மொமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.இன்னும் 2 வருசத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க.. வங்கதேச கேப்டன் எச்சரிக்கை 1

இதுகுறித்து மொமினுல் ஹக் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடன் பயிற்சியாளருடன் இணைந்து டெஸ்ட் அணியை பற்றி விவாதிக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

அணியின் கட்டமைப்பு பற்றி விவாதிக்க முடியும். தற்போது எங்களால் உடனடியாக வெற்றிகளை பெற முடியாமல் இருக்கலாம், ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் எங்களால் வெற்றியை ஈட்ட முடியும்.

மனதளவில் தயாராகிவிட்டால், நேர்மறையாக சிந்திக்க முடியும். டெஸ்ட் கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி யோசித்தால் மனநிலை அதிலேயே இருக்க வேண்டும். அதன்பின் தானாகவே டெஸ்ட் போட்டியை பற்றி சிந்திக்க தோன்றும்.

இன்னும் 2 வருசத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க.. வங்கதேச கேப்டன் எச்சரிக்கை 2
Shadman Islam of Bangladesh bats during day one of the the 1st Test match between India and Bangladesh held at the Holkar Cricket Stadium, Indore on the 14th November 2019.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

நாங்கள் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடைசி ஏழு மாதங்களில் பார்த்தீர்கள் என்றால், இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். மற்ற அணிகளைப் போன்று நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இது மிக முக்கியமான வேறுபாடு’’ என்றார்.

வங்காளதேசம் இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87-ல் வெற்றி பெற்றுள்ளது. 13 முறை வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான வெற்றி அந்த அணியை விட குறைவான ரேங்கில் உள்ள அணிகளுக்கு எதிராக கிடைத்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது. • SHARE

  விவரம் காண

  அடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி!

  விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

  விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..!

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

  ஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா? – பாண்டியா ஓபன் டாக்

  காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா?  என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...

  பல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி!

  இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...

  மும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்

  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...