டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஷாட் அடிப்பதை அதிக அளவில் பார்க்கமுடியாது, ஆனால் டி20 போட்டிகள் வந்த பிறகு அனைத்தும் மாறியது.
சமீபத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி அனைத்து அணிகளையும் தோற்கடித்து, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.
தற்போது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சில கிரிக்கெட் வீரர்கள் அடித்து விளையாட தொடங்கிவிட்டார்கள். இதனால் தான், 8வது இடத்தில் இறங்கிய ஹர்டிக் பாண்டியா வாணவேடிக்கைகளை காட்டி சதம் அடித்து அசத்தினார்.
அந்த அதிவேக சதத்தின் போது ஏழு சிக்ஸர்களை விளாசினார் இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா, ஆனால் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்.
அதிகமாக 12 சிக்ஸர் அடித்து ஜடேஜா முதல் இடத்தில் இருக்கிறார். 10 சிக்ஸர்கள் அடித்து ஹர்டிக் பாண்டியா மற்றும் குஷால் பெரேரா அடுத்த இடத்தில் உள்ளார்கள்.
மிஸ்பா உல் அக் 9 சிக்ஸர், ஸ்டார்க் 8 சிக்ஸர், க்ராந்தோம்மே மற்றும் மெண்டிஸ் ஆகியோர் 7 சிக்ஸர் அடிக்க, ரஹீம், ஸ்டோக்ஸ், மத்தியூஸ், வார்னர் ஆகியோர் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள். 5 சிக்ஸர்கள் அடித்து ஷமி, சஹா மற்றும் காக் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளார்கள்.