இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிளான் அதொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாராமாக ஆடி வருகிறது.இந்த போட்டியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி, வெறும் 238 பந்துகளில் 201 ரன் குவித்தார். இந்த இரட்டை சதம் விராட் கோலியின் 6வது இரட்டை சதமாகும்.
தான் கேப்டனாக பொருப்பேற்கும் வரை ஒரு இரட்டை சதம் கூட அடிக்காத விராட் கோலி திடீரென குருகிய காலகட்டத்தில் 6 டெஸ்ட் இரட்டை சதங்களை விளாசித்தள்ளியுள்ளார். மேலும், இந்த 6ஆவது இரட்டை சதத்தின் மூலம் கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவான் சர்.டொனால்டு பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக இதுவரை அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியளில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அந்த பட்டியளில் முதல் 6 வீரர்களைக் காண்போம்
5.மைக்கேல் க்ளார்க் – 4 இரட்டை சதம்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை வென்ற கேப்டன் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். பின்னர் ரிக்கி பாண்டிங் ஓய்வுபெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆன பின்னர் ஆஷஷ் உள்ளிட்ட தொடர்களை வென்றுள்ளார். அவர் கேப்டனாக இருந்த போது 4 இரட்டை சதம் அடித்துள்ளார்.