யார் என்ன சொன்ன என்ன? கூலாக டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் தோனி

தல தோனியைப் பற்றி நாலாபுறமும் விமர்சங்களும் ஆதரவும் பறந்து கொண்டிருக்கும் வேலையில் இவர் ஒரு புறம் தனது குடும்பத்துடன் டான்ஸ் ஆடி விளையாடிகொண்டிருக்கின்றார். என்னதான் இருந்தாலும் அவர் கூலாக இருப்பது தான் அவர்து வெற்றிக்குக் காரணமாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மிகவும் அமைதியானவர். எந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர் சாந்தமாகவே இருப்பார். மற்ற வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும் அவர் சிரித்துக்கொண்டு மட்டுமே இருப்பார்.

இந்நிலையில், டோனியின் நண்பரும் அவரின் சிகை அமைப்பாளருமான சப்னா பவானி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவில் டோனி ஹாலிவுட் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடினார். அதனை கண்டு சாக்‌ஷி பயங்கரமாக சிரித்து மகிழ்கிறார். அவரின் நடனத்திறமையை கண்டு அனைவரும் மகிழ்கின்றனர்.

அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக டோனியின் குடும்பம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பரவி வருகின்றனர். டோனியின் மகள் பாடல் பாடிய வீடியோ வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.