லட்சுமி ராய் – தோனி, மீண்டும் சர்ச்சை!!
மீண்டும் தோனியைப் பற்றி லட்சுமி ராய் அவர்களது காதல் கருத்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் அவர் நடித்திருக்கும் ஜூலி-2 படத்தின் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது.
அந்த பட பிரமோசன் விழாவில் அவரைப் பற்றி கூறியதாவது,
தோனியுடனான என்னுடைய உறவு மறக்க முடியாதது. அது என்றும் மாறாதது. இன்னும் மக்கள் எங்களைப் பற்றி பேசுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் தோனிய்னு கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேசும் போது, அந்த தொடர்ச்சியில் நானும் வந்து விடுகிறேன். என் பெயரும் அடிபடுகிறது.
எதிர் காலத்தில் ஒருநாள் இதைப் பற்று தொலைகாட்சியில் ஒளிபரப்பானால் , என்னுடைய குழந்தைகள் இதனைப்பற்றி கேட்க்ப் போகிறார்கள்.
பல பெண்கள் டோணி ஒன்றும் அவர் வாழ்வில் என்னை மட்டும் காதலிக்கவில்லை. எனக்கு பிறகு பிற பெண்களை காதலித்துள்ளார். பெண்கள், உறவுகளை தாண்டியது தான் வரலாற்று படம் என்கிறார் ராய் லட்சுமி.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தபோதுதான், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியை லட்சுமிராய் சந்தித்தார். அப்போதே இருவருக்கும் இடையே நட்பு நெருக்கமானது.
அதன்பிறகு சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோதெல்லாம் இருவரும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தனர்.
கிரிக்கெட் போட்டி இல்லாத நேரத்திலும், ஏதாவது விளம்பரப் பட சாக்கில் சென்னை வரும் டோணி, லட்சுமிராயைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து டோனி-லட்சுமிராய் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியது. இதை லட்சுமிராய் மறுக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவுமில்லை.
தனது பெற்றோருக்குத் தெரியாமலும் இருமுறை டோணி சென்னைக்கு வந்து லட்சுமிராயைச் சந்தித்துள்ளார். இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டி முடிந்தது. அப்போதும் டோனி தங்கியிருந்த ஓட்டலுக்கு லட்சுமி ராய் சென்றார்.
இருவரும் சேர்ந்து வெளியே சில இடங்களுக்கும் சென்று வந்தனர். லட்சுமியுடனான உறவு பற்றி டோனி இதுவரை மவுனம் காத்து வருகிறார். இது தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் லட்சுமி ராயோ, டோனி எனக்கு நண்பர் மட்டுமே எனக் கூறியிருக்கிறார். சென்னை டெஸ்ட் தொடங்கும் முன் டோனியைச் சந்திக்க வந்த லட்சுமி ராயை பாதுகாப்பு காரணங்களாக காவலர்கள் தடுத்தனர்.
உடனே டென்ஷனான டோணி, என் வருங்கால மனைவியை எப்படி தடுத்து நிறுத்தலாம் என சண்டைக்கு வந்துவிட்டார் என காவலர்கள் தெரிவித்தனர். பின்னர் இது பற்றி லட்சுமி ராய் கூறுகையில், டோனி என்னை வருங்கால மனைவி என்று கூறினாரா? என எனக்குத் தெரியாது.
அப்படியே கூறியிருந்தாலும் அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னை சந்தித்தபோது பரிசு ஏதாவது தந்தாரா என நிறைய பேர் கேட்கிறார்கள்.
பரிசு தந்து என்னை கவர வேண்டிய அவசியம் டோனிக்கு இல்லை.
அந்த கட்டத்தைத் தாண்டியது எங்கள் நட்பு, என்று கூறியிருந்தார் லட்சுமிராய். திரைப்பட நடிகைகளுடன் கிரிக்கெட் வீர்கள் இணைத்துப் பேசப்படுவதும், காதல் பரபரப்பில் விழுவதும் இது புதிதல்ல.
பிரபர வீரர்கள் மன்சூர் அலிகான் பட்டோடியிலுருந்து யுவராஜ் சிங் வரை பெரும்பாலான வீரர்கள் யாராவது ஒரு நடிகையின் ரசிகர்களாகவே உள்ளனர்.
முன்பு லட்சுமிராயுடன் ஸ்ரீசந்தும் சுற்றியது நினைவுகூறத்தக்கது.