இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரின் ஓய்வு குறித்து பல கருத்துகள் கடந்த 2019 இல் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் பரவி வருகிறது. ஆனால் எதற்கும் கொஞ்சம் கூட சலைக்காத தோனி எனக்கு என்ன கவலை என்று எவ்வித பதிலும் இல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
தோனியின் சர்வதேச ஓய்வு குறித்து அவருக்கு தலைவலி ஏற்படுகிறதோ இல்லையோ அவருடன் கிரிக்கெட் விளையாடிய வீரர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் ரசிகர்கள் மறுபுறம் மீடியாக்களும் தோனியின் ஓய்வு குறித்த தகவலை எப்படியாவது பெற வேண்டும் என அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் தற்போது வரை அவர் கிரிக்கெட் ஆடுகளத்தின் பக்கமே வரவில்லை. ஐபிஎல் தொடரில் ஆடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தின் முகாமில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தாண்டி இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது சந்தேகம் தான்.
ஆனால் பல முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் டோனியின் இந்திய கிரிக்கெட் அணி கனவு முடிந்து விட்டது, அவர் ஓய்வு பெற்று விடலாம் என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றன.ர் இதனையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத தோனி எதற்கும் சளைக்காமல் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து ரோஹித் சர்மாவிடம் இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான ரோகித் சர்மா…
எப்போதெல்லாம் தோனி கிரிக்கெட் விளையாட பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் ரேடாரில் இருந்து மறைந்து விடுகிறார். பாதாளத்திற்கு சென்று பந்துகி கொள்கிறார். யார் யாருக்கு அவர் மீண்டும் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரிந்து கொள்ள வேண்டுமோ, அவர்கள் எல்லாம் அவரிடமே நேரடியாக சென்று கேட்டுக்கொள்ளுங்கள். அவர் ராஞ்சியில் தான் வசிக்கிறார்.