இந்திய அணி அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்து வெற்றி நடையாக அணியை தயாரித்துக்கொண்டு இருக்கிறது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து, விராட் கோலி அணியை கைப்பற்றி வெற்றி மேல் வெற்றியாக குவித்து வருகிறார்.
இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் இன்னும் இரு தொடரைக் கூட இழக்கவில்லை. அப்படி இருக்க அணியில் சில சில மாற்றங்களுகுக்காக தொடர்ந்து அணியை சீர்படுத்தி வருகிறார். பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் பல மாற்றங்களை செய்து 2019 ஒருநாள் உலககோப்பைக்கு கிட்டத்தட்ட இப்போதே தயாராகிவிட்டது.
அதிலும் தற்போது இந்திய அணியின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் 2019ல் இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் உகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற ஒரு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டட்ராபியில் கூட இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது.
மேலும், தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி தான் பட்டம் வென்றது. இதனால் 2019 உகக்கோப்பையை வெல்ல இந்திய அணி வாய்ப்பு அதிகம்.
இதனை வைத்து, இன்க்பார் என்ற இணையதளம், 2019 உலகக்கோப்பை பிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது. அதில் இந்திய அணி தான் வெற்றி பெறும் எனக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது. மேலும்,இந்த ட்வீட்டை இந்திய அணியின் முன்னாக கேப்டன் தோனி லைக் செய்திருந்தார்.இதனால் தோனி பிக்ஸ் செய்துவிட்டாரா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தோணி இன்னும் ஒரு விளக்கம் தரவில்லை.
ஆனால், இது இந்திய அணி 2019ல் உலகக்கோப்பை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது எனக் நினைத்து அதனை லைக் செய்ய தான் அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.