தோனி உட்பட மூத்த கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது டி20-க்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
ஏற்கனவே, பார்ம் இன்றி தவித்து வரும் டோனி, ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் அவர் இடம்பிடிக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். குறுகிய ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. ஒரு நாள் தொடரில் மட்டுமே அவர் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் ஓய்வில் இருக்கும் அவர், உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே தொடர் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத், ‘’தோனி உட்பட மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், ’’இந்தியாவுக்கு விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரரும், தங்கள் மாநில அணிக்காக விளையாடுவது அவசியம். நாட்டுக்கான அணியில் இடம் பெறாத நிலையில் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
தோனி உட்பட பல மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஒரு பார்மெட் போட்டியில் மட்டும் விளையாடுகிறீர்கள் என்றால், தேர்வுக்குழு பரிசீலனைக்காக, அனைத்துவிதமான உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும்’’ என்றார்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனையை சமன் படைத்தார். எம்எஸ் டோனிக்குப் பிறகு ரிஷப் பந்த் இந்தியாவின் நிரந்தர விக்கெட் கீப்பராக ஜொலிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டோனிதான் இந்திய நாட்டின் ஹீரோ என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘டோனி இந்திய நாட்டின் ஹீரோ. ஒரு மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் டோனியிடம் இருந்து ஏராளமாக கற்றுள்ளேன். அவர் எப்போதெல்லாம் என்னுடன் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் அதிக வசதியாக இருப்பதாக உணர்கிறேன்.
எனக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும், டோனியிடம் அதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். அவர் சரியான தீர்வை கூறுவார். அவர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், அடிலெய்டில் உருவான நெருக்கடியான சூழ்நிலையின்போது எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.