போட்டி முடியும் போதுதான் அவர் ஆட்டமே ஆரம்பிக்கும்: தல தோனியை வாய் நிறைய புகழ்ந்த ராகுல் டிராவிட் 1

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி போட்டி முடியும் நேரத்தில் தான் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்குள் தோனி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனதால் அவர் அணியில் இடம்பெறுவது நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து தோனி குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இஎஸ்பிஎன் கிரிக்கெட் இணையதளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நடத்திய நிகழ்ச்சியில் ராகுல் டிராவிட் பங்கேற்றார்.போட்டி முடியும் போதுதான் அவர் ஆட்டமே ஆரம்பிக்கும்: தல தோனியை வாய் நிறைய புகழ்ந்த ராகுல் டிராவிட் 2

அப்போது பேசிய டிராவிட், “தோனியின் ஆட்டத்தைப் போட்டி முடியும் நேரத்தில் தான் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். முக்கியமான நேரத்தில் சரியாக ஆடுவார். ஆனால் போட்டியின் முடிவு குறித்து அவர் பெரிதும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டார். போட்டி முடியும் வரை விளையாட வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்” என்றார்.

அத்துடன், தோனியைப் போன்ற மனநிலையை அனைவரும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்காகப் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் டிராவிட் தெரிவித்தார். தான் அதுபோன்ற மனநிலையை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை எனவும், தோனி எப்படி அவ்வாறு இருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறினார்.போட்டி முடியும் போதுதான் அவர் ஆட்டமே ஆரம்பிக்கும்: தல தோனியை வாய் நிறைய புகழ்ந்த ராகுல் டிராவிட் 3

2004 ஆம் ஆண்டு, வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு அறிமுகமானார் தோனி. ஆனால், விசாகப்பட்டிணத்தில் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி, 148 ரன்கள் அடித்தபோதுதான் அவரை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

பின்னர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அவர் மட்டும்தான் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்ட மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார். அவரது தலைமைக்குக் கீழ்தான் இந்தியா, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது. போட்டி முடியும் போதுதான் அவர் ஆட்டமே ஆரம்பிக்கும்: தல தோனியை வாய் நிறைய புகழ்ந்த ராகுல் டிராவிட் 4

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி, பல நேரங்களில் இந்தியாவுக்காக இறுதி வரை களத்தில் நிதானமாக விளையாடி வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார். கிரிக்கெட் ‘பெஸ்ட் ஃபினிஷர்’ என்றும் தோனி புகழப்படுகிறார்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு, விராட் கோலிக்கு தன் தலைமைப் பொறுப்பை தோனி விட்டுத் தந்தார்.போட்டி முடியும் போதுதான் அவர் ஆட்டமே ஆரம்பிக்கும்: தல தோனியை வாய் நிறைய புகழ்ந்த ராகுல் டிராவிட் 5

கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து விலகியிருக்கும் 38 வயதான தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கம்-பேக் கொடுக்க இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டதால், தோனியின் கம்-பேக் தள்ளிப் போயுள்ளது.

சமீபத்தில் தோனி, இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளில், அவரின் தடுப்பாட்டம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்தப் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *