நியூசிலாந்து வீரர்ளுடன் கலகலவென கால்பந்து வாலிபால் விளையாடும் தோனி

மழையால் தடைபடவிருந்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி எப்படியோ நடந்துவிட்டது. நியஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயனம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 என குறுகிய சீசனுக்கு இந்தியா வந்தது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என மூன்றாவது போட்டி வரை செல்ல, டி20 தொடரும் அதே போல் 3ஆவது போட்டி வரை சென்றது.

மூன்றாவது போட்டி நடைபெற்ற திருவனந்தபுரம் மைதானம் 29 வருடத்தில் தற்போது தான் முதன்முறையாக சர்வதேச போட்டியை நடத்தியது. இருந்தும் போட்டிக்கு முன்னர் கனத்த மழை பெய்த்தால் போட்டி நடத்த சில மணி நேரம் தாமதம் ஆனது.

போட்டி துவங்கும் வரை வீரர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஃப்ரீயாக இருந்தது, இந்த நேரத்தில் விராட் கோலி மைதானத்திற்குள் சென்று ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மேலும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார்.

மேலும், இந்த நேரத்தில் தோனி என்ன செய்தார் தெரியுமா? இரண்டாவது போட்டியின் தோல்விக்கு இவர் தான் காரணம் என ஒரு க்ரூப் இவரை மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கும் வேலையில் இவர் அதையெல்லாம் துளி கூட கண்டுகொள்ளாமல், ஜாலியாக நியூசிலாந்து அணி வீரர்கள்லுடன் உடைமாற்று அறையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

உடைமாற்று அறையில் இருந்த 4 சேர்கலை எடுத்து தூணிற்கு அருகில் வைத்து அதனை ஒரு தடை போல் உறுவாக்கி, கால்பந்தை வைத்து வாலிபால் போல் விளையாடி இருக்கிறார் அந்த கூல் மனிதர்.

ஒரு அணியில் தோனி மற்றும் மணீஷ் பாண்டே மற்றொரு அணியில் நியூசிலாந்து வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் டாம் ப்ரூஸ் என பிரித்துகொண்டு அந்த கால்பந்து வாலிபால் விளையாட்டை விளையாடியுள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் மார்டின் கப்டில், ‘மழை இருந்தால் என்ன செய்வது? கால்பந்து வாலிபால் இவர்களுடன் விளையாடுவோம்’ என பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ பதிவு கீழே :

மழையால் 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த திருவனந்தபுரம் போட்டியின் முதலில் இந்தியா பேட்டிங் செய்து 67 ரன் அடித்தது. பின்னர் அதனை சேஸ் செய்து விளையாடி நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 6 ரன் வித்யாசத்தில் தோல்விய்டைந்தது. இந்த பொட்டியில் அற்புதமாக வீசிய ஜஸ்பிரிட் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், தொடர் நாயகனாகவும் ஜஸ்பிரிட் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

Editor:

This website uses cookies.