இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. வரும் ஜனவரி மாதம் வரை 5ஆம் தேதி துவங்கவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாட 17 பேர் கொண்ட இந்திய அணியும் 2 வலை பயிற்சி பந்து வீச்சாளர்களை சென்றுள்ளனர்.
கடந்த வருடம் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி இரண்டு வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகக்கில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். தற்போது அவர் டெஸ்ட் அணியில் இல்லாத காரணத்தால் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார் தோனி. சென்ற வருடம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி அந்த நேரத்தில் சையத் முஷ்டாக் அலி எனப்படும் உள்ளூர் டி20 தொடரில் தனது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடினார். மேலும், இந்த அணிக்குபவர் தான் கேப்டன் பொறுப்பிலும் இருந்து வழி நடத்தினார்.
தற்போது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதி போட்டி முடிந்தவுடன் சில நாட்களில் இனபிஹா சையத் முஸ்தாக் அலி கோப்பை துவங்கிவிடும். 4 கட்டமாக நடைபெறும் இந்த தொடரில் சென்ற வருடம் ஜார்கண்ட் அணியை வழி நடத்தி விளையாடினார் தோனி. தற்போது ஜனவரி 8 முதல் 14அஆம் தேதி இந்த சவுத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்பதும் போல் தோனி வேலைப்பளு இல்லாமல் இருப்பதால் இந்த தொடரில் கலந்து கொள்வார். மேலும் ஜார்க்கண்ட் அணிக்கு இவரே கேப்டனாக நியமிக்கப்படுவார். ஏனெனில் கடைசியாக இலங்கை அணியுடன் விலியாபி தோனி அதன் பின்னர் பேட்டை தொடவில்லை. பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க செல்லும் தோனி அங்கு இந்திய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறார். அதற்கு முன்னர் பயிற்சி எடுக்கும் விதமாக கண்டிப்பாக ஜார்க்கண்ட் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 11அம் தேதி தென்னாப்பிரிக்கவுடன் ஒருநாள் தொடர் துவங்கியுள்ள நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னரே தோனி தென்னாப்பிரிக்கா சென்றுவிடுவார். தோனி மட்டுமில்லாமல், லிமிடெட் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் அக்சர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், சரதுல் தாகூர், தினேஷ் கார்த்திக், யூஜெவேந்திர சகால், குல்தீப் யாதவ், கேதர் ஜாதவ் ஆகியோர் தென்னாப்பிரிக்கா பயணம் செய்வர். அதற்கு முன்னர், இந்த அனைத்து வீரகளுக்கு தங்கள் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பை விளையாடுவார்கள்.
ஏற்கனவே தினேஷ் கார்த்திக் தமிழக அணிக்காக விளையாட பெயரிடப்பட்டுள்ளது குறியப்பிடத்தக்கது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடி சென்றிருக்கும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் மீண்டும் இந்தியா வந்து உள்ளூர் போட்டிகளில் ஆடுவார்கள். குறிப்பாக சையத் முஷ்டாக் அலி கோப்பை அவர்களுக்கு ஒரு பேரொய வாய்ப்பாகும். தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் இதற்கு முன்னர் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடும் பட்சத்தில் மீண்டும் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு தேர்வாவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் 6 ஒருநாள் போட்டி என்பதால் ஏதாவது ஒரு வீரருக்கு காயம் ஏற்படலாம். இல்லை 3 போட்டிகளுக்கு பிறகு அணியை மாற்றி அறிவிக்கலாம். அதன் காரணமாக இருவரும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் நன்றாக ஆடும் பட்சத்தில் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்று இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடலாம்.
எது எப்பொடியோ தல தோனி மீண்டும் கேப்டன் ஆவது உறுதி.