தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும் ஓய்வு பெறத்தேவையில்லை என்றும் சில வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தோனி, தனது எதிர் காலம் குறித்து மவுனமாக இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட தோனி, இந்திய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றினார்.

இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியா வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது.
இந்திய அணி விவரம்:
- விராட் கோலி(கேப்டன்)
- ரோகித் சர்மா(துணை கேப்டன்)
- கே.எல்.ராகுல்
- ஷிகர் தவான்
- ஷிரேயாஸ்
- மணிஷ் பாண்டே
- ரிஷப் பண்ட்
- ஹர்திக் பாண்ட்யா
- ரவீந்திர ஜடேஜா
- குர்னல் பண்ட்யா
- வாஷிங்டன் சுந்தர்
- ராகுல் சாஹர்
- கலில் அகமது
- தீபக் சாஹர்
- நவ்தீப் சைனி
போட்டி விவரம்:
முதல் டி20 போட்டி: செப். 15 – தர்மசாலா
2வது டி20 போட்டி : செப். 18 – மொஹாலி
3வது டி20 போட்டி : செப். 22 – பெங்களூரு
இந்நிலையில் தோனி அணியில் இல்லாததைப் பற்றி பேசி உள்ள தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது…
இந்த தொடரில் நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தேவை என்பதை அறிந்,து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். இந்த அணியில் மூன்று சுழற்பந்து வீச்சு ( ஆல் ரவுண்டர்கள்) இடம்பெற்றுள்ளனர். மேலும், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பும் வழங்கப்படும்.

during the ICC Champions Trophy match Group B between India and South Africa at The Oval in London on June 11, 2017 (Photo by Kieran Galvin/NurPhoto via Getty Images)
டோனியை பற்றி பேசினோம் ஆனால், அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரை போலவே இந்த தொடரிலும் தனக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே அவர் அணியில் இடம்பெறவில்லை என்று கூறினார் எம்எஸ்கே பிரசாத்.
India’s squad for 3 T20Is against South Africa: Virat(Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Shreyas, Manish Pandey, Rishabh Pant (WK), Hardik Pandya, Ravindra Jadeja, Krunal Pandya, Washington Sundar, Rahul Chahar, Khaleel Ahmed, Deepak Chahar, Navdeep Saini#INDvSA
— BCCI (@BCCI) August 29, 2019