தோனி ஒரு நல்ல கிரிக்கெட்டர் என்பதைத் தாண்டி அவரிடம் பல கவர்ந்திழுக்கும் குணாதிசயங்கள் உள்ளன என்பதுதான் அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உலக அளவில் இருப்பதற்கு முக்கியக் காரணம். பொதுவாக எல்லோருக்கும் பல விஷயங்களில் ஆர்வமிருக்கும், ஆனால் அந்த ஆர்வங்களுக்காக நாம் எவ்வளவு கவனத்தையும், நேரத்தையும் செலவழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே ஒரு பன்முக ஆளுமையாக நாம் மாறுவதும் அமையும்
இந்தியாவில் தோனிதான் முதலில் வாங்கி இருக்கிறார். இதன் விலை சுமார் ரூ. 88 லட்சம். தோனி தனக்காக சில பிரத்யேக வசதிகளை சேர்க்கச் சொல்லியிருக்கக் கூடும். அந்த வசதிகள் என்னவெனத் தெரியவில்லை.
இந்திய ராணுவத்தில் அவருக்குக் கவுரவ லெஃப்டினென்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்ட பிறகு, கவுரவ பதவிகள் வழங்கப்படும் மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல், ஒரு ராணுவ வீரன் எடுக்கும் பயிற்சிகளைத் தானும் எடுக்க வேண்டும் என ராணுவ முகாமில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார் தோனி. அதற்குக் காரணம் தோனிக்கு சிறிய வயதில் ராணுவ அதிகாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தாமதமாக நடந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
அதே போல் பைக், கார்கள் இவற்றின் மீதும் அவருக்கு மிகுந்த பிரியமும் ஆர்வமும் உள்ளது. அவர் முதன் முதலில் பயன்படுத்திய ராஜ்தூத் பைக் முதல், சந்தையில் சமீபத்தில் அறிமுகமான கான்ஃபிடெரேட் ஹெல் கேட் வரை நூற்றுக்கணக்கான பைக்குகளை அவர் வைத்துள்ளார். அவரிடம் நூற்றுக்கணக்கான பைக்குகள் இருப்பதால், அவருடைய வீட்டில் ஒரு பைக் மியூசியத்தையே அவர் அமைத்துள்ளார்.
தோனி வீட்டில் அமைத்துள்ள பைக் மியூசியம்.
அதே போல் கார்கள் மீதும் பிரியம் அதிகம் இருப்பதால் கார்களை வாங்கிக் குவிக்கும் தோனி, தற்போது ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். ‘ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக் ஹை பெர்ஃபார்மென்ஸ் எஸ்யூவி’ என்ற புதிய காரை எம் எஸ் தோனி வாங்கியுள்ளார். இதை தோனியின் மனைவி சாக்ஷி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ”டிராக்ஹாக் ரெட்பீஸ்டை வீட்டிற்கு வரவேற்கிறோம். கடைசியாக உன்னுடைய பொம்மை வந்துவிட்டது மஹி. இந்த வகைக் காரில் இதுதான் இந்தியாவின் முதல் கார் என்பதால், இந்தியக் குடியுரிமை வாங்குவதற்கு இது காத்திருக்கிறது.” எனப் பதிவிட்டுச் சிவப்பு கலர் ஜீப் செரோக்கி டிராக்ஹாக் காரின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மிகவும் சக்திவாய்ந்த கார் என்பதாலும், அதிக பவரை வெளிப்படுத்தக்கூடியது என்பதாலும் இதில் 8 ஆட்டோ டிரான்ஸ்மிஷன் கியர்கள் உள்ளன. மேலும் அதற்கேற்ப அதிநவீன வசதிகளும் உள்ளன. இவ்வளவு சக்தியையும் தாங்கக்கூடிய அளவில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்ஹாக் பார்ப்பதற்கு கிராண்ட் செரோக்கி எஸ் ஆர் டியை போலவே இருக்கும். அந்த கார் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனையில் உள்ளது. ஆனால் அதனை விடக் கொஞ்சம் பெரியதாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கும் இதில் பகல் நேரத்தில் எரியக்கூடிய எல்ஈடி முகப்பு விளக்குகள், 20 இன்ச் கருப்பு வண்ண அலாய் வீல்கள் உள்ளன. மேலும் முன் பக்க கதவுகளில் ‘ கிராண்ட் செரோக்கி சூப்பர் சார்ஜ்ட்’ என்ற எழுத்துகளும், ஹெமி 6.2 முத்திரையும் இருக்கும். பின்பக்கம் டிஃபூஸருடன் கூடிய எக்ஸாஸ்ட் சிஸ்டம் இதில் உள்ளது.

இந்த காரின் இன்டீரீயரைப் பொறுத்தவரை இதில் 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் இன்ஃபோடெய்ன்மெண்டொடு சேர்த்து காரின் ஃபெர்பாமென்ஸ் தொடர்பான அத்தனை தகவல்களும் கிடைக்கும். இதில் நப்பா லெதர் சீட்டுகள் சிவப்பு வண்ணத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் காரில் உள்ள சிறப்பு அம்சங்கள்.

ஆனால் தனக்கென்று பிரத்யேகமாக என்னென்ன வேலைப்பாடுகளை எம் எஸ் தோனி, ஜீப் நிறுவனத்திடம் செய்யச் சொல்லி இந்த காரை வாங்கியுள்ளார் என்பது குறித்து தெரியவில்லை. தற்போது காஷ்மீரில் பேரா ஷீட் ரெஜிமெண்டின் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் தோனி ஓட்டுவதற்கு இந்த சிவப்பு அரக்கன் காத்திருக்கிறான்.