மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா ஆடுவது சந்தேகம் என தெரிய வந்துள்ளது
அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் மும்பை அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.
மும்பை இந்தியன்ஸ் அணி:

மும்பை இந்தியன்ஸ் 6 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 18 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 24 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.
ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. பேரிண்டர்ஸ் சிங் சரன்,
2. லசித் மலிங்கா
3. யுவராஜ் சிங்
4. அன்மோல் பிரீத் சிங்
5. பங்கஜ் ஜெய்ஸ்வால்
6. ரஸிக் டார்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ரோஹித் சர்மா, பும்ரா, ஹார்திக் பாண்டியா, குணால் பாண்டியா, இஷான் கிஷான், ஆதித்யா தாரே, அனுகுல் ராய், சூர்யகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹார், கியோன் பொல்லார்ட், மிட்செல் மெக்லின்ஸ், எவின் லீவிஸ், பென் கட்டிங், ஜேசன் பெக்டார்ஃப், சித்தஷ் லாட், குவின்டொன் டி, ஏடம் மில்னே.
ஐபிஎல் தொடரில் இந்தியாவின் முக்கிய பவுலர்கள் விளையாடுவது குறித்து பேசியுள்ள தல தோனி, “ஐபிஎல் தொடர், உலகக் கோப்பை 2019 தொடருக்காக தயாராக சிறப்பான தருணமாக அமையும். ஐபிஎல் தொடர் மூலம் இந்திய பவுலர்கள் சிறப்பான பயிற்சி கிடைக்கும். 
ஆனால் அதில் முக்கியமானது என்னவெனில் பவுலர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்போது உறங்குகிறார்கள், எழுந்திருக்கிறார்கள் என்பது முக்கியம். அவர்களின் உடல் நிலையை சரியாக வைத்துக் கொள்வது அவசியம்.” என கும்ளேவின் கருத்துக்கு அப்படியே எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இருவரும், எதேச்சையாகவே பேட்டி அளித்துள்ளனர். அவர்களிடம் வைக்கப்பட்ட ஒரே கேள்விக்கு எதிரும் புதிருமான பதில் வந்துள்ளது.
கும்ளேவின் கூற்று ஏற்கக் கூடியதாகவே உள்ளது. ஏனெனில் கடந்த ஐபிஎல் போட்டி முடிவில் பல பவுலர்கள், மேட்ஸ்மேன்கள் என காயமடைந்தோர் பட்டியல் நீண்டது. அதனால் உலகக் கோப்பைக்கு முன்னர் முக்கிய பவுலர்கள் மட்டுமல்ல பேட்ஸ்மேன்களுக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டியது முக்கியம்.