இந்தியன் பிரீமியர் லீக் இந்த உலகிலேயே புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடர் ஆகும். 2008-இல் இருந்து இந்தியன் பிரீமியர் லீக் தொடர் சில தேவையில்லாததை உருவாக்கி கொண்டிருக்கிறது, அதில் ஒன்று தான் இந்த சூதாட்டம்.
இந்த ஐபில்-இல் டெல்லி vs குஜராத் போட்டி பிக்சிங் என கூறியதற்காக கான்பூரில் 3 நபர்களை போலீஸ் கைது செய்தது. அதை தொடர்ந்து பெட்டிங் காரணமாக டெல்லியில் 4 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ்.
அதை தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர், மும்பை மற்றும் புனே விளையாடிய இறுதி போட்டியை கரக்டாக கணித்துள்ளார். இறுதி போட்டி நடந்த நாளின் காலையில் இந்த போட்டியின் முடிவு குறித்து கணித்தார். அவர் கணிதத்தில், டாஸ் முடிவு மட்டும் தான் தவறாக சென்றது.
புனே டாஸ் வென்றிருந்தால் பவுலிங் போட முடிவு செய்திருக்கும், மும்பை டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்யும் என கணித்தார். ஆனால், டாஸ் வென்றிருந்தால் நானும் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்பேன் என ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
பொல்லார்ட் ஒரு சிக்ஸ் தான் அடிப்பார் என கூறினார். அதை போலவே, பொல்லார்ட் வந்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்துவிட்டு, 7 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்தது, இந்த போட்டியில் ஒரு நோ-பால் கூட போட மாட்டார்கள் என கூறினார். அதை போலவே எந்த பந்துவீச்சாளர்களும், நோ-பால் வீச வில்லை.
அடுத்தது, மும்பை 120 – 130 ரன்கள் அடிக்கும் & வெற்றி பெறும் என கூறினார். அதை போலவே 129 அடித்த மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.
அடுத்து பார்திவ் பட்டேல் 10 ரன்னுக்குள் வெளியேறுவார் என ட்வீட் செய்தார். அதை போலவே, பார்திவ் பட்டேல் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அதே போல் திருப்பதியும் 10 ரன் தாண்டமாட்டார் என கூற, பும்ரா பந்துவீச்சில் 3 ரன்னில் அவுட் ஆனார் திருப்பதி.
ஸ்ட்ரைக்-ரேட் 100-க்கு கம்மியாக தான் ஸ்மித் விளையாடுவார் என கூறியிருந்தார். அந்த போட்டியில் ஸ்மித் 50 பந்தில் 51 ரன் அடித்திருந்தார்.
இந்த போட்டியில் ஸ்மித் தான் அதிக ரன் அடிக்கப்போவதாக ட்வீட் பண்ணிருந்தார். அதை போலவே ஸ்மித் தான் அந்த போட்டியில் அதிக ரன் அடித்திருந்தார்.
அதுமட்டும் இல்லாமல், மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றி பெறும் என கூறியிருந்தார். அதை போலவே, மும்பை அணி கடைசி ஓவரில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.