17 வயதில் இரட்டை சதம்: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பொளந்து கட்டிய இளம் சிறுவன்! 1

இப்போதெல்லாம் யாரும் சதமெடுத்து மட்டும் கவனம் ஈர்ப்பதில்லை. நேராக இரட்டைச் சதம் தான். அதுவும் 50 ஓவர் ஆட்டத்தில்.

கடந்த வாரம் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் இரட்டைச் சதமெடுத்தார். இன்று 17 வயதே நிரம்பிய மும்பையைச் சேர்ந்த யாஷவி ஜெயிஸ்வால், ஜார்கண்டுக்கு எதிராக இரட்டைச் சதமெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து 9-வது இந்திய வீரர், ஜெயிஸ்வால். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர், கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காக மும்பைக்கு இடம் மாறினார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.17 வயதில் இரட்டை சதம்: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பொளந்து கட்டிய இளம் சிறுவன்! 2

அலூரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார் ஜெயிஸ்வால். அதில் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள். அதாவது 140 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளில் கிடைத்துள்ளன. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் இந்த இளம் வீரர் எடுக்கும் மூன்றாவது சதம் இது. இதற்கு முன்பு கோவாவுக்கு எதிராக 113 ரன்களும் கேரளாவுக்கு எதிராக 122 ரன்களும் எடுத்தார். ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதத்தால் மும்பை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. விஜய் ஹசாரே போட்டியில் கெளஷல், சஞ்சு சாம்சன் ஆகியோருக்குப் பிறகு சதமடித்துள்ளார் ஜெயிஸ்வால்.

கடந்த வருடம் டாக்காவில் நடைபெற்ற யு-19 ஆசியக் கோப்பைப் போட்டியில் 318 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் ஜெயிஸ்வால். இறுதிப் போட்டியில் 113 ரன்கள் எடுத்து இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வெல்ல உதவினார்.17 வயதில் இரட்டை சதம்: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பொளந்து கட்டிய இளம் சிறுவன்! 3

மேலும் முதல் ஐந்து லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 504 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவின் கிரீம் பொல்லாக் 493 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜெய்ஸ்வாலின் முதல் 5 லிஸ்ட் ஏ ஆட்டங்களின் ஸ்கோர்கள் – 44, 113, 22, 122 & 203. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 17 வயதில் இரட்டைச் சதமெடுத்த முதல் வீரரும் ஜெய்ஸ்வால் தான். இதற்கு முன்பு, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த இளம் வீரர், ஆலன் பாரோ. 20 வயது 275 நாள்கள். 1975-ல் அதைச் சாதித்தார். ஆனால் ஜெயிஸ்வால் 17 வயது 292 நாள்கள் என மிகக்குறைந்த வயதில் இச்சாதனையை நிகழ்த்தி விட்டார்.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *