அண்டர்-19 அணியில் இடம் பிடிப்பதே என் நோக்கம்.. ஐபிஎல் இல்லை: 4.8 கோடிக்கு விலை போன 18 வயது வீரன்! 1

இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இணைவது தான் தனது முதல் முக்கியம் எனவும் ஐபிஎல் அணியில் இணைவது எனக்கு பெரிதாக இல்லை எனவும் 4.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ரூ.4.80 கோடிக்கு விலை போன பஞ்சாப்பை சேர்ந்த விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங், டோனியை எதிர்த்து விளையாட ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 60 வீரர்கள் ரூ.106 கோடியே 80 லட்சத்திற்கு ஏலம் போனார்கள். பிரபலமில்லாத இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ அடித்தது தான் இந்த ஏலத்தின் சிறப்பம்சமாகும்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் முதல்தர கிரிக்கெட் போட்டியிலோ அல்லது எந்த ஒரு அதிகாரபூர்வ 20 ஓவர் போட்டியிலேயோ இதுவரை ஆடியது இல்லை. ஜூனியர் மட்டத்தில் விளையாடி வருகிறார். ஆச்சரியப்படும் வகையில் அவரை ரூ.4.80 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வசப்படுத்தியது.அண்டர்-19 அணியில் இடம் பிடிப்பதே என் நோக்கம்.. ஐபிஎல் இல்லை: 4.8 கோடிக்கு விலை போன 18 வயது வீரன்! 2

ஜூன் மாதம் உள்ளூரில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான (23 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் சிம்ரன் சிங் 301 பந்துகளில் 298 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இதை கவனத்தில் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம், கடந்த செப்டம்பர் மாதம் அவரை பயிற்சி முகாமுக்கு அழைத்திருந்தது. அப்போது 10 ஓவர்களில் 100 ரன்கள், 8 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இரண்டு வகையான சவால் கொடுக்கப்பட்டது. இந்த போட்டிகளில் முறையே 19 மற்றும் 29 பந்துகளில் சிம்ரன்சிங் அரைசதம் விளாசினார். அப்போதே அவரை பஞ்சாப் அணி குறி வைத்து விட்டது.

பிரப்சிம்ரன்சிங்கும் அவரது உறவினரான அன்மோல்பிரீத்சிங் (20) இருவரும் எப்போதும் இணைந்தே பயிற்சி மேற்கொள்வார்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக ஆடும் அன்மோல்பிரீத்சிங்கை ரூ.80 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இருவரும் மூன்று மணி நேர பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது, உறவினர்கள் திரண்டு விட்டனர். அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

18 வயதான பிரப்சிம்ரன் சிங் கூறுகையில், ‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 10 வயது இருக்கும்போது முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் பார்த்தேன். டோனி, கில்கிறிஸ்ட் ஆட்டத்தை பார்த்தேன். அவர்களை போல் நானும் வர வேண்டும் என்று கனவு கண்டேன். ஐ.பி.எல். போட்டியில் டோனிக்கு (சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்) எதிராக விளையாட ஆர்வமுடன் உள்ளேன். அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரை ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் விக்கெட் கீப்பிங் தொடர்பாக சில யோசனைகளை வழங்கினார். அவரை எதிர்த்து ஆட இருப்பது வித்தியாசமான உணர்வை தரும்’ என்றார்.அண்டர்-19 அணியில் இடம் பிடிப்பதே என் நோக்கம்.. ஐபிஎல் இல்லை: 4.8 கோடிக்கு விலை போன 18 வயது வீரன்! 3

 

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரையாஸ் ராய் பர்மனை பெங்களூரு ராயல சேலஞ்சர்ஸ் அணி ரூ.1½ கோடிக்கு இழுத்தது. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக அதிக விக்கெட்டுகள் (11 விக்கெட்) வீழ்த்தியவரான ராய் பர்மனின் தற்போதைய வயது 16 ஆண்டு 56 நாட்கள். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடங்கும் போது அவர் 17 வயதை கூட நிறைவு செய்திருக்கமாட்டார். அதனால் 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் அவர் விளையாடினால் குறைந்த வயதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடியவர் என்ற பெருமையை பெறுவார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *