ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிக முக்கியமான போட்டியில் கிடைத்த வெற்றி குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
எங்களுக்கு இந்த வெற்றி அவசியம். இது தொடரின் முக்கியமான கட்டத்தில் மிக முக்கியமான வெற்றி. கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற முயற்சித்தோம். இன்று எங்களுக்கு அந்த இரண்டு புள்ளிகள் தேவைப்பட்டது. இது எங்களுக்கு அவசியமான தொடக்கம். கடந்த காலத்தில் பலவற்றை பற்றி நாங்கள் பேசியிருப்போம். பந்துவீச்சாளர்களிடம், யார்கர் பந்து வீசுவதில் உங்கள் தைரியத்தை உணருங்கள், உங்கள் வேலையை செய்யுங்கள் என்று கூறினோம். அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். உமேசின் ஓவர். பேட்டிங்கில் கொலினின் ஓவர். ஜேபி வீசிய அந்த ஓவரை மனன் குறிவைத்தது போட்டியை மாற்றியது.

மனன் போட்டியை அவர்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டார். இரு புள்ளிகள் பெற, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விளையாட்டு எங்களுக்கு தேவைப்பட்டது. எங்களிடம் நல்ல நோக்கம் இருந்தது, அதனால் முடிவுகள் எங்கள் பக்கம் வந்தது. இந்த நம்பிக்கையை நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
எனது மனைவி இங்கு வந்துள்ளார், இன்று அவருக்கு பிறந்தநாள். இது அவருக்கு சிறிய பரிசாக அமைந்தது. அவர் முன்னிலையில் இந்த இரண்டு புள்ளிகளை பெறுவது மிகவும் அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. மும்பையின் ஹார்திக் பாண்டியா 50 ரன்கள், மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக ஆடினார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 167/7, மும்பை அணி 153/7 ரன்களை எடுத்தன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இண்டியன்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 31-வது ஆட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ள மும்பைக்கும், 7-ஆம் இடத்தில் உள்ள பெங்களூருவுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு அணி சார்பில் மனன் வோரா-டிகாக் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வோரா தொடக்கம் முதலே அடித்து ஆடத் தொடங்கினார். டிகாக் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த வோரா, மார்கண்டே பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். மெக்கல்லம்-கேப்டன் கோலி இணை அதிரடியாக ஆடத் தொடங்கியது. இந்நிலையில் மெக்கல்லம் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவால் ரன் அவுட்டானார்.

கேப்டன் கோலி 32 ரன்களுக்கும், மந்தீப் சிங் 14 ரன்களிலும் , வாஷிங்டன் சுந்தர், டிம் செளதி ஆகியோர் தலா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 20-வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் காலின் டி கிராண்ட்ஹோம் 2 சிக்ஸர்களை விளாசினார். அவர் 10 பந்துகளில் 23 ரன்களை எடுத்தார்.
பெங்களூரு அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்திருந்தது. மும்பை தரப்பில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், மெக்ளேனகன், பும்ரா, மார்கண்டே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி தரப்பில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். செளதி பந்து வீச்சில் இஷான் ரன் ஏதுமின்றி போல்டானார். இதனால் துவக்கமே மும்பைக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
சூரியகுமார் யாதவ் 9, டும்னி 23, பொல்லார்ட் 13 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் தான் சந்தித்த முதல் பந்திலேயே உமேஷ் பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.