இலங்கை அணி கடந்த சில வருடங்கலாக தோல்விகளில் துவண்டு வருகிறது. இந்த வருடம் மட்டும் 37 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மனதிற்கு ஆறுதலாக இலங்கை அணியிக்கு எதுவுமே கடந்த சில வருடங்களாக கிடைக்கவில்லை. இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் ஒருநாள் போட்டியில் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால், அந்த மகிழ்ச்சி ரொம்ப காலம் நீடிக்கவில்லை.
அடுத்த இரண்டாவது நாளியேலே இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இலங்கையை வச்சி செய்துவிட்டார். அப்படி இருக்க இலங்கை கிரிக்கெட்டிற்கு சற்று ஒரு நிம்மதியான செய்தி வந்து சேர்ந்துள்ளது. ஒரே ஓவரில நவிந்து பசாரா என்ற வீரர் 7 சிக்ஸர்கல் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அங்கு முரளி குட்னஸ் கப் என்ற அண்டர்-15 கிரிக்கெட் தொடரை நடித்தினார்.
இந்த தொடரின் முதல் சீசன் இது தான். முரளி குட்னஸ் கப்பின் இறுதி போட்டி கடந்த சனிக்கிழமை ஹிட்டாடுவா ஸ்ரீ சுமங்களா எம்.சி.சி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியைப் காண முத்தையா முரளிதரன் வந்திருந்தார். FOG கிரிக்கெட் அகாடமு அணிக்காக தர்மபாலா கொட்டவா அணிக்கு எதிராக ஆடினார் நவிந்து பாசரா.
36 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் வெறும் 87 பந்துகளில் 109 ரன் அடித்து துவம்சம் செத்தார் நவிந்து. இறுதியில் அவரது அணி 36 ஓவர்களுக்கு 283 ரன் குவித்தது. வலது கை பேட்ஸ்மேனாக இவர் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அஓரக்க விட்டார். அதில் ஒரு நோபாலும் அடங்கும். கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார் நவிந்து. இதற்கு முன்னர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததே சாதனை. (கிப்ஸ், சாஸ்திரி)

மேலும், இவர் தனது பள்ளியான ரேவட்டா கல்லூரிக்கு அண்டர்-15 மற்றும் அண்டர்-19 அணிக்காகவும் ஆடி அசத்தி வருகிறார். இந்த முரளி குட்னஸ் கப்பை முரளிதரன் ஸ்பான்சர் செய்து நடத்தி வருகிறார். எப்படியும் இன்னும் சிக வருடத்தில் நவிந்து இலங்கை அணியில் இடம் பிடிப்பார் எனலாம்.